Skip to main content

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்




ஒரு விடுதலை வீரன் மரணிப்பதில்லை,அவன் அந்த தேசத்தை நேசிக்கும் ஆயிரம் ஆயிரம் தேசபக்தர்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பான்.

அப்படியான ஒரு விடுதலை வீரன் தான் நேதாஜி,நேதாஜி என அழைக்கப்படும் விடுதலை வீரன் “நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்” ஆவார்.

ஈழத்து வரலாற்றில் தமிழீழ தேசிய தலைவர் தனது ஆத்மார்த்த குருவாக இவரையே தன் நெஞ்சில் ஏற்றுக்கொண்டாதாக நம் வரலாறு பெருமைப்பட்டுகொள்ளுகிறது.

யார் இந்த நேதாஜி....

அவசரக்காரர்-ஆத்திரக்காரர் என்று கூறினார் மகாத்மா காந்தி
படபடப்பானவர்-பண்படாதவர் என்று கூறினார் ஜவகர்லால் நேரு அவர்கள்

ஆனால் வரலாறு ஏற்றுக்கொண்டது அவன் ஒரு

விடுதலை வீரன்

கொள்கை வீரன் என்று.

தாய் நாட்டின் விடுதலைக்காக தனது 24 வயதில் I.C.S என்ற உத்தியோகத்தை துாக்கி எறி்தார்.

35 வயதில் தனக்கு சொந்தமாக இருந்த கட்டாக் நகரில் தான் பிறந்த மாளிகையை தேசத்திற்காக அர்பணித்தார்.

42 வயதில் தான் தலைமை தாங்கியிருந்த அகில இந்திய காங்கிரஸ் பதவியை துாக்கி எறிந்தார்.

44 வயதில் தன் தேச விடுதலைக்காக தாய் நாட்டை விட்டு பிரிந்து அயல்தேசம் சென்றார்.

இப்படியாக தனது தேசத்தின் விடுதலைக்காக முழுமையாக அர்பணிப்புடன் போராடிய ஒரு விடுதலை வீரன் இவன்.

தேசத்தை விட்டு வெளியேறி இருப்பினும் கொண்ட கொள்கையில் ஒரு உறுதியுடன் அன்றைய உலக ஒழுங்கை நன்கு விளங்கிக் கொண்டு அதனை தனது தேசத்தின் விடுதலைக்காக மாற்றியமைத்த ஒரு அரசியல் தலைவனும் கூட இவன்.

தன் உயிரையே பணயம் வைத்து ஜெர்மனியிலும், ஜப்பானிலும், கிழக்காசிய நாடுகளிலும் அலைந்து திரிந்து ஒரு தற்காலிக சுதந்திர அரசை அமைத்து இந்திய தேசிய இராணுவத்தைத் திரட்டி போரிட்டு உலக வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனை அத்தியாயத்தை உருவாக்கியவர் கூட இந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்களே.

ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளுடன் நேதாஜி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு அதில் கையெழுத்திட்டார். இந்திய நாட்டில் வேரூன்றிய அன்னிய ஆட்சியை அகற்றுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்த மூன்று நாடுகளும் ஒப்பந்தத்தில் கூறியிருந்தன. அன்றைய காலக்கட்டம் 2ம் உலகப்போர் இடம்பெற்ற காலமாதலால் அங்கு காணப்பட்ட அரசியல் சாதக தன்மையை தனது தேசத்தின் விடுதலைக்கான இலகுவழியாக மாற்றும் எண்ணத்துடன் அவர் செயற்பட்டார்.இதை அன்று மகாத்மா காந்தி அவர்கள் கடுமையாக எதிர்த்தும் இருந்தார்.இருந்தும் இவர் தனது பாதையை மாற்றியதாக இல்லை.

1943 அக்டோபர் மாதம் 21ம் தேதியன்று காலையில் சிங்கப்பூர் ‘தைதோவா கெகிஜோ’ வில் நடைபெற்ற மாநாட்டில் தற்காலிக சுதந்திர இந்திய அரசை பிரகடனப்படுத்திய நேதாஜி,

“நமக்கென்று ஓர் இராணுவமும் அமைக்கப்பட்டு விட்டதனால், நமக்கென்று ஒரு சுதந்திர அரசை அமைப்பது சாத்தியமும், அவசியமும் ஆயிற்று. இந்தியாவின் முழு விடுதலைக்கான இறுதிப்போரை நடத்துவதற்காகவே இந்தத் தற்காலிக அரசு பிறந்திருக்கின்றது”  என்று முழங்கினார்.

இதனை தொடர்ந்து அக்டோபர் 23ம் தேதியில் இருந்து நவம்பர் 18ம் தேதிக்குள் ஜப்பான, பர்மா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி குரேஷியா, சீனா, மஞ்சுகோ, இத்தாலி, தாய்லாந்து போன்ற அரசுகள் தற்காலிக சுதந்திர இந்திய அரசை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தன.அதற்கு அஸ்த்திவாரமாக ஏற்கனவே, 

இந்திய தேசிய இராணுவத்தைக் கட்டியெழுப்பி பயிற்சி கொடுத்திருந்தார் நேதாஜி. பயிற்சி முற்றுப்பெற்ற வீரர்களைப் பகுதி பகுதியாக பிரித்தார். சிங்கப்பூர், பர்மா, மலேசியா, தாய்லாந்து நாடுகளுக்குத் தன்னுடைய படை வீரர்களை அனுப்பினார்.

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின் அங்கத்தவர்களாக ஜான்சிராணி என்கின்ற பெண்கள் படையும் பாலர் படையும் இருந்தன. பன்னிரண்டு வயதிற்கு மேல் பதினெட்டு வயதிற்கு உட்பட்ட இளையவர்களின் படையே பாலர் படையென அழைக்கப்பட்டது. இந்தப்படையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இளையவர்கள் இருந்தார்கள்.

அத்துடன் தனது படைகளை கட்டுக்கோப்பாகவும் ஒழுக்கமுள்ள சிறந்த வீரர்களாகவும் அவர் உறுவாக்கியிருந்தார். இதனை ஆதறித்த ஜப்பான் அரசு தான் 2ம் உலகபோரில் கைப்பற்றிய அந்தமான் நிக்கோபர் தீவுகளை நேதாஜியிடமே ஒப்படைத்தது.

1943ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம்தேதி இந்தியாவின் மூவர்ணக் கொடியை அந்தமான் தீவில் நேதாஜி பறக்க விட்டார்.

1944 மார்ச் 18 இந்திய மண்ணில் நேதாஜியின் படைகள் கால் பதித்தது.தொடர்ந்து நிலங்களை கைப்பற்றியபடி முன்னேறிய இவரது படைகள் அமெரிக்க அரசிடம் அடிபணிந்த ஜப்பானால் ஆட்டம் காணத்தொடங்கியது.  படைகள்  மீண்டும்  பர்மாவிற்கு  பின்வாங்கின,
இருந்தும் அந்த தோல்வியை அவர் இது நாம் ஆடிய முதல் ஆட்டம் இதில் நாம் தோற்றாலும் அடுத்துவரும் வெற்றிகளுக்கு இது படிக்கல்லாக அமையும் என்றார்.

1945 ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி ஜப்பானுக்கு  இவர் பயணம் செய்த விமானம் வழியில் தீப்பற்றி விபத்துக்குள்ளாகியதால் இவர் மரணமடைந்ததாக இன்று வரை நம்பப்படுகிறது.

குறிப்பு: தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் இவரை பற்றி குறிப்பிடும் போது
சிறுவயது முதல் இந்திய விடுதலைப்போராட்ட வரலாறுதான் என்னைக் கவர்ந்திருந்தது. இநதப் போராட்டத்தில் நேதாஜி அவர்கள் கொண்டிருந்த பங்கு என்னை ஆழமாகத் தொட்டது.

‘சுபாஸ் சந்திரபோஸின் வாழ்க்கை என்னைக் கவர்ந்தது. அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் நூல் வடிவில் வந்தன. அவற்றை படித்தேன். அவை அப்படியே என் நெஞ்சில் படிந்தன. கடைசித்துளி இரத்தம் இருக்கும்வரை என் மண்ணுக்காக நான் போராடுவேன். என்ற நேதாஜியின் வீரஉரையை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். நினைவிற்கு வரும்போதெல்லாம் இந்தச் சொற்கள் என் நெஞ்சை சிலிர்க்க வைத்தன.என்றார்.

இப்படியான ஒரு வீரனை ஈன்றெடுத்த அந்த வீரத்தாயின் பெயர் தான்
பார்வதி.

இங்கு ஒரு விசயம் மிக தெளிவானது. அதாவது இயற்கை மட்டும் அன்றி வரலாறுகள் கூட ஒரு வட்டப்பாதையில் திரும்ப திரும்ப நிகழ்பவையே.

ஈழவிடுதலை பயணத்தில் இன்று ஏற்பட்டிருக்கும் இந்த தொய்வு நிலையானது அல்ல, இதற்கு பின்னால் நாமும் நம் மக்களும் நடந்து போகவேண்டிய ஒரு கடிணமான பாதை உள்ளது.

அதற்கு வேற்றுமைகளை கலைந்த ஒரு ஒற்றுமை அவசியம். விட்ட தவறுகளை திருத்தி நாம் பயணிக்கவேண்டிய இலக்கை நோக்கி நடக்கவேண்டிய தூரம் இன்னும் உள்ளது என்று கூறினார்.  

Comments

Popular posts from this blog

பனங்கிழங்கின் பயன்கள்!

✦ பனங்கிழங்கு குளிர்ச்சித் தன்மை உடையது. மலச் சிக்கலைத் தீர்க்கக் கூடியது. ✦ கிழங்கை மாவாக்கி அதோடு கருப்பட்டியும் சேர்த்து உருண்டை பிடித்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலு கிடைக்கும். ✦ கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மாவாக்கி சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் பருமனாகும். ✦ பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் வலுவடையும். ⚡பனங்கிழங்கு ..!!⚡  இப்போது பனம் கிழங்கு காலம் . எல்லோர் வீட்டிலும் எல்லா இடங்களிலும் பனம் கிழங்கை காணலாம் . பனம் கிழங்கை விரும்பாதோர் எவரும் இல்லை . எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் . ✦ மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது இந்த பனம் கிழங்கு . பனம் கிழங்கை அவித்து சும்மாவும் சாப்பிடலாம் . வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு துவைத்தும் உண்ணலாம் . கூடுதலாக பல்லு இல்லாதவர்கள் இப்படி உண்பார்கள் . ✦ பனம் பழங்கள் கிடைக்கும் காலங்களில் விதைகளைச் சேமித்து வைக்கும் மக்கள், உரிய காலத்தில் மண்ணைக் குவித்து மேடை போல அமைத்து, அதன்மேல் பனம் விதைகளைப் பரவி விடுவர். விதை முளைத்துக் கிழங்கு உருவானதும் அத...

IELTS READING SAMPLES FOR GENERAL TRAINING

IELTS READING SAMPLES FOR GENERAL TRAINING   ROBOTS AT WORK   A The newspaper production process has come a long way from the old days when the paper was written, edited, typeset and ultimately printed in one building with the journalists working on the upper floors and the printing presses going on the ground floor. These days the editor, subeditors and journalists who put the paper together are likely to find themselves in a totally different building or maybe even in a different city. This is the situation which now prevails in Sydney. The daily paper is compiled at the editorial headquarters, known as the prepress centre, in the heart of the city, but printed far away in the suburbs at the printing centre. Here human beings are in the minority as much of the work is done by automated machines controlled by computers. B Once the finished newspaper has been created for the next morning’s edition, all the pages are t...

வயிற்றை சுத்தம் செய்வது எப்படி?

kutty maruthuvam ஸ்ரீ கோரக்கர் சித்தர் எழுதிய "ரவிமேகலை" நூலில் இருந்து... புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை வாய்மையாற் காணப் படும்.. என்ற குறள் உடலின் தூய்மை மற்றும் மனதின் தூய்மை பற்றி வலியுறுத்துகிறது. இந்த அகத் தூய்மை மற்றும் புறத்தூய்மை தாண்டிய மூன்றாவது ஒரு தூய்மை குறித்து சித்தர் பெருமக்கள் பேசுகின்றனர். அதுவும் அகத் தூய்மைதான். நம் உடலின் உள்ளுறுப்புகளை பற்றியது அது. பிறந்த நிமிடம் முதல் இறுதி மூச்சுவரை ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உள்ளுறுப்புகளின் தூய்மை மற்றும் ஓய்வினை சித்தர் பெருமக்கள் உணர்ந்திருந்தனர். அதன் பொருட்டே சீரான இடைவெளிகளில் உபவாசம் எனும் உண்ணா நோன்பினையும், உள்ளுறுப்புகளை சுத்தி செய்யும் வகைகளையும் வரையறுத்துக் கூறியிருக்கின்றனர். அந்த வகையில் இன்று வயிற்றினை சுத்தம் செய்யும் முறை பற்றி பார்ப்போம். நம் உடலிற்குத் தேவையான சத்துகள் நாம் உண்ணும் உணவில் இருந்தே பெறுகிறோம். உணவில் இருந்து சத்துக்களை உடலுக்கு பிரித்தளிக்கும் வேலையை செய்வது நமது வயிறு. இதனை தூய்மையாய் வைத்திருந்தால் உடல் ஆரோக்கியத்தை ...