Skip to main content


சீனாவின் முதலிடம் பறிபோகும்: அதிக தொழிலாளர்களை உருவாக்கும் இந்தியா


 உலகில் அதிக தொழிலாளர்களை உருவாக்கும் நாடு என்ற பெருமையை, இன்னும் சில ஆண்டுகளில் சீனாவிடம் இருந்து, இந்தியா தட்டிப் பறிக்கவுள்ளது. அதேநேரத்தில், இந்தியாவில் உருவாகும் தொழிலாளர்களில், 5.8 கோடி பேர், குறைந்த தொழில் திறன் உடையவர்களாகவே இருப்பார்கள் என்றும், இவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது சிரமமாக இருக்கும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கி வரும், பிரபல கன்சல்டிங் நிறுவனமான மெகன்சி அன் கோ சர்வதேச அளவிலான தொழிலாளர் பிரச்னைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குறைந்த திறன்: உலகிற்கு அதிக தொழிலாளர்களை உருவாக்கி தரும் நாடு என்ற பெருமையை, தொடர்ந்து பல ஆண்டுகளாக சீனாவே தக்க வைத்துக் கொண்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில், இந்த பெருமையை, சீனாவிடம் இருந்து, இந்தியா தட்டிப் பறிக்கும். அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மிக அதிகமான தொழிலாளர்கள் உருவாக்கப்படுவார்கள். அதேநேரத்தில், இந்தியாவில் உருவாகும் தொழிலாளர்களில், 5.8 கோடி பேர் குறைந்த தொழில் திறன் கொண்ட தொழிலாளர்களாகவே இருப்பர். குறைந்த திறனுடைய தொழிலாளர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிப்பதால், இவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கும். குறைந்த சம்பளத்துக்கு பணியாற்றக் கூடிய தொழிலாளர்களின் எண்ணிக்கை, எதிர்காலத்தில் சீனாவில் குறைந்தாலும், கல்லூரி படிப்பை முடித்த திறன் கொண்ட தொழிலாளர்களை உருவாக்குவதில், சீனா முக்கிய பங்காற்றும். வரும் 2030ல், சர்வதேச அளவில் உருவாகும் 60 கோடி தொழிலாளர்களில் 60 சதவீதம் பேர், சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இதன்மூலம், உலகின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, 2030ல், 350 கோடியை எட்டும். அதாவது 25 வயது முதல் 50 வயது வரை உள்ள திறன் படைத்தவர்கள் ஆவர்.
உபரி தொழிலாளர்கள்: இந்தியாவிலும், மற்ற வளரும் நாடுகளிலும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், உபரியாக உள்ள குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 9.4 கோடியை எட்டும். அதேநேரத்தில், சர்வதேச அளவில் திறனுடைய தொழிலாளர்களுக்கான தேவை அதிகரிக்கும். குறிப்பாக, திறன் கொண்ட தொழிலாளர்கள், நான்கு கோடிக்கும் அதிகமாக தேவைப்படுவர். நவீன தொழில் நுட்ப தேவைகளுக்கு ஏற்ப இவர்கள் சந்தையில் பயன்படுத்தப்படாமல் இருப்பர். சர்வதேச அளவில், உபரியாக உள்ள 9.4 கோடி, குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களில், பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியர்களாக இருப்பது அபாயமாகும். இதன்மூலம், பொருளாதார ரீதியாக மற்ற நாடுகளுடன் போட்டியிடும் திறன், இங்கு குறைவாக இருக்கும்.
வளர்ச்சிக்கு பாதிப்பு: இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, 40 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், 1.2 கோடி தொழிலாளர்கள் புதிதாக உருவாகின்றனர். இந்தியாவில் குறைந்த திறனுடைய தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு தொடர்ந்தால், அது, தொழில் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தொழில் துறையில் அதி நவீன தொழில்நுட்ப சாதனங்கள் வரும் சூழலில், அவற்றை இயக்குவதற்கு, திறனுடைய தொழிலாளர்கள் இல்லாத நிலை ஏற்படும். குறைந்த திறனுடைய தொழிலாளர்களுக்கு போதிய வேலை வாய்ப்பும் கிடைக்காத சூழல் உருவாகும். எனவே, தொழிலாளர்களின் திறனை மேம்படுத்த, முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபாயம் எப்படி? ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான அனு மத்காவ்கார் கூறியதாவது: சீனா மற்றும் வளர்ச்சி அடைந்த நாடுகளை விட, தொழிலாளர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக உருவானாலும், இங்கு உருவாகும் தொழிலாளர்கள் திறன் குறைந்தவர்களாக இருப்பது, மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். இந்தியாவில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு தேவையான, நடுத்தர திறன் கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்படும். எனவே, இந்தியாவில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த, உயர்நிலை கல்வியுடன், போதிய தொழில் பயிற்சி பெற்ற, திறன் கொண்ட தொழிலாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அனு மத்காவ்கார் கூறினார்.
பிரபல மனிதவளத் துறை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பாலாஜி கூறுகையில்,தயாரிப்பு துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், நம் நாட்டின் தொழிலாளர் சட்டங்கள் இல்லை. தொழிலாளர்களை இடம் பெயர்க்கும் நடவடிக்கைகள் நம் நாட்டில் போதுமான அளவு இல்லை. நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, விவசாயத் துறையின் பங்களிப்பு மிக குறைந்த அளவே உள்ளது. ஆனால், இத்துறையில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இது, வேலை வாய்ப்பின்மையை விட, மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது என்றார்.

Comments

Popular posts from this blog

பனங்கிழங்கின் பயன்கள்!

✦ பனங்கிழங்கு குளிர்ச்சித் தன்மை உடையது. மலச் சிக்கலைத் தீர்க்கக் கூடியது. ✦ கிழங்கை மாவாக்கி அதோடு கருப்பட்டியும் சேர்த்து உருண்டை பிடித்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலு கிடைக்கும். ✦ கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மாவாக்கி சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் பருமனாகும். ✦ பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் வலுவடையும். ⚡பனங்கிழங்கு ..!!⚡  இப்போது பனம் கிழங்கு காலம் . எல்லோர் வீட்டிலும் எல்லா இடங்களிலும் பனம் கிழங்கை காணலாம் . பனம் கிழங்கை விரும்பாதோர் எவரும் இல்லை . எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் . ✦ மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது இந்த பனம் கிழங்கு . பனம் கிழங்கை அவித்து சும்மாவும் சாப்பிடலாம் . வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு துவைத்தும் உண்ணலாம் . கூடுதலாக பல்லு இல்லாதவர்கள் இப்படி உண்பார்கள் . ✦ பனம் பழங்கள் கிடைக்கும் காலங்களில் விதைகளைச் சேமித்து வைக்கும் மக்கள், உரிய காலத்தில் மண்ணைக் குவித்து மேடை போல அமைத்து, அதன்மேல் பனம் விதைகளைப் பரவி விடுவர். விதை முளைத்துக் கிழங்கு உருவானதும் அத...

IELTS READING SAMPLES FOR GENERAL TRAINING

IELTS READING SAMPLES FOR GENERAL TRAINING   ROBOTS AT WORK   A The newspaper production process has come a long way from the old days when the paper was written, edited, typeset and ultimately printed in one building with the journalists working on the upper floors and the printing presses going on the ground floor. These days the editor, subeditors and journalists who put the paper together are likely to find themselves in a totally different building or maybe even in a different city. This is the situation which now prevails in Sydney. The daily paper is compiled at the editorial headquarters, known as the prepress centre, in the heart of the city, but printed far away in the suburbs at the printing centre. Here human beings are in the minority as much of the work is done by automated machines controlled by computers. B Once the finished newspaper has been created for the next morning’s edition, all the pages are t...

வயிற்றை சுத்தம் செய்வது எப்படி?

kutty maruthuvam ஸ்ரீ கோரக்கர் சித்தர் எழுதிய "ரவிமேகலை" நூலில் இருந்து... புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை வாய்மையாற் காணப் படும்.. என்ற குறள் உடலின் தூய்மை மற்றும் மனதின் தூய்மை பற்றி வலியுறுத்துகிறது. இந்த அகத் தூய்மை மற்றும் புறத்தூய்மை தாண்டிய மூன்றாவது ஒரு தூய்மை குறித்து சித்தர் பெருமக்கள் பேசுகின்றனர். அதுவும் அகத் தூய்மைதான். நம் உடலின் உள்ளுறுப்புகளை பற்றியது அது. பிறந்த நிமிடம் முதல் இறுதி மூச்சுவரை ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உள்ளுறுப்புகளின் தூய்மை மற்றும் ஓய்வினை சித்தர் பெருமக்கள் உணர்ந்திருந்தனர். அதன் பொருட்டே சீரான இடைவெளிகளில் உபவாசம் எனும் உண்ணா நோன்பினையும், உள்ளுறுப்புகளை சுத்தி செய்யும் வகைகளையும் வரையறுத்துக் கூறியிருக்கின்றனர். அந்த வகையில் இன்று வயிற்றினை சுத்தம் செய்யும் முறை பற்றி பார்ப்போம். நம் உடலிற்குத் தேவையான சத்துகள் நாம் உண்ணும் உணவில் இருந்தே பெறுகிறோம். உணவில் இருந்து சத்துக்களை உடலுக்கு பிரித்தளிக்கும் வேலையை செய்வது நமது வயிறு. இதனை தூய்மையாய் வைத்திருந்தால் உடல் ஆரோக்கியத்தை ...