கோயில்களில் தேங்காய் உடைப்பதற்கான தாத்பரியம் என்ன? ஸ்வாமிக்கு சமர்ப்பித்த தேங்காயில் ஒரு மூடியை அர்ச்சகருக்குத் தரவேண்டுமா? எனில், இரண்டு மூடிகளில் எதைத் தருவது? | |
| "தாவரங்கள் அவனது படைப்பு. ஓஷதிகளும் (அரிசி, கோதுமை போன்ற) பயிரினங்களும், தென்னை, மா, பலா போன்ற வனஸ்பதிகளும் மற்ற உயிரினங்களுக்கு உணவாகும் நோக்கத்தில் இறைவனால் படைக்கப்பட்டவை.
வனஸ்பதியைச் சார்ந்தது தேங்காய். அதை உட்கொள்ளும் தகுதி இருப்பதால், அதை அவருக்குப் படைத்து, அவரது திருப்பார்வை பட்டு சுத்தமான தேங்காயை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
இறைவனுக்கு அளிக்கும் அளவுக்குத் தூய்மை பெற்றது தேங்காய். இயற்கையாகவே வளர்ந்து நாம் உட்கொள்ளும் அளவுக்கு முழுமை பெற்ற பொருள் அது. அப்படி, கடவுளுக்குப் படைத்து அவரின் பார்வை பட்டுப் புனிதமாகும் பொருளை, தனக்கு மட்டுமே ஒதுக்கிக்கொள்ளாமல் மற்றவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் எனும் நோக்கத்தில், கடவுளை வழிபடும் பெரியோருக்குப் பகிர்ந்தளிப்பது சிறப்பு.
கண் இல்லாத தேங்காய் மூடியை அர்ச்சகருக்கு அளித்து மகிழலாம்.
............................................................................................................................................!!! | |
| பிரதமையில் சுபகாரியங்களை விலக்கவேண்டுமா?
" ஒரு சுபவேளை பூரணத்துடன் திகழ, சந்திர பலமும் வேண்டும். பிரதமை தினத்தில் சந்திர பலம் இருக்காது. அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை, ’வளர்பிறை’ என்று பெயரளவில் இருந்தாலும், அன்று சந்திர பலம் போதுமான அளவு இல்லாததால், அந்த நாளைத் தவிர்க்குமாறு தர்ம சாஸ்திரம் பரிந்துரைக்கிறது.
மனதுக்குக் காரகன் சந்திரன். அவன் களையிழந்து இருக்கும் வேளை, மனோபலத்தை குன்றச்செய்யும்.... 'பிரதமையில் கல்வி கற்றவனது கல்வியைப் போல் இளைத்து விட்டாள் அன்னை சீதாபிராட்டி’ என்று ஸ்ரீராமனிடம் அனுமன் விவரிப்பதாக ஒரு செய்யுள் உண்டு (ப்ரதிபத்பாடசீல ஸ்யவித்யேவதனுதாம்கதா).
ஆகவே, வளர்ந்தோங்கி சிறப்புற வேண்டிய காரியங்களில், பிரதமை திதியைத் தவிர்ப்பது நல்லது. மனதுக்குக் காரகனாகிய சந்திரன், தனது ராசியிலிருந்து 8-ல் மறைந்திருக்கும் வேளையில் செய்யப்படும் செயல்கள் சிறக்காது என்று ஜோதிடத்திலும் தகவல் உண்டு. செய்யும் காரியத்தைச் சிறக்கவைக்க சந்திரனின் ஒத்துழைப்பு தேவை என்பதால், பிரதமையை நல்ல வேளை எனக் குறிப்பிடவில்லை ஜோதிடம்.
ஆனால் சில இடங்களில்... குறிப்பாகக் கேரளத்தில், தேய்பிறை பிரதமையை, சுபகாரியங்களுக்கு பயன்படுத்துவர். தேய்பிறை சந்திரன் வளர்ந்த சந்திரனாக இருப்பதால், அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்!
............................................................................................................................................!!! | |
| அனுமன் அஷ்டோத்ர நாமாவளியில், 'பீம சோதரனே போற்றி’ என்று ஒரு வரி வருகிறது. எனில், பீமனுக்கு அனுமன் சகோதரரா?
"வாயு பகவானின் அருளால் அஞ்சனாதேவிக்குப் பிறந்தவர் ஆஞ்சநேயர். வாயுவின் அருளால் குந்திதேவிக்குப் புதல்வனானவன் பீமசேனன். ஆக, வாயு பகவான்தான் இந்த இருவருக்கும் தகப்பன் முறை. எனில், பீமனும் அனுமனும் சகோதரர்கள்தானே!"
............................................................................................................................................!!! | |
| பிறந்த குழந்தையை முதன் முதலாகக் கோயிலுக்குக் கொண்டு செல்வது எப்போது? சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் :
பிறந்த 4-வது மாதத்தில், குழந்தையை வீட்டிலிருந்து வெளியே கொண்டு வரலாம் என்கிறது தர்மசாஸ்திரம். 4-வது மாதத்தில், குழந்தைக்கு சூரியனைக் காட்ட வேண்டும். இந்த வைபவத்துக்கு நிஷ்க்ரமணம் என்று பெயர்.
உடலும் உள்ளமும் இணையாக வளர்ந்து, குழந்தை ஒரு வயதை எட்டும்போது, பேச ஆரம்பிக்கும். அந்த வேளையில் கோயிலுக்கு அழைத்துச் செல்வது பொருந்தும்.
எப்போதும் பரபரப்பு- அவசரத்துடன் இயங்கும் இன்றைய சூழலில், சட்டதிட்டங்களை மீறுவதில் தயக்கம் இருக்காது. விஞ்ஞான விளக்கம் என்ற போர்வையில், ஆசைக்கு அடிமையாகி பல நல்ல நடைமுறைகளைப் புறக்கணிப்பது உண்டு! கோயிலில் கேட்கும் வாத்திய ஓசை, மக்களின் குரல், கூட்ட நெரிசல் ஆகியவை ஒரு வயது நிரம்பாத குழந்தையின் மனதைப் பாதிக்கும். ஆக, ஒரு வயது ஆனதும் குழந்தையை கோயிலுக்கு அழைத்துச் செல்லலாம்.
|
புரோட்டின் சத்துக்களை அதிகம் கொண்ட பச்சை பயறை தினம் சாப்பிட உடலில் இருக்கும் அதிகமான வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரும். தோல் புற்று நோய் மற்றும் தோலில் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் பச்சை பயறு உதவும். ரத்த சோகையை குண படுத்தும் இரும்பு சத்துக்கள் பச்சை பயறில் அதிகம் காண படுகிறது. மேலும், இது முடி உதிர்வை தடுக்கிறது https://srk2581.blogspot.com
Comments
Post a Comment