அண்டார்டிகா பகுதியில் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருவதால், அங்கு வாழும் பென்குவின் இன பறவைகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதே போன்று உலகின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வந்தால் பெரும்பாலான கடல்வாழ் பறவை இனங்கள் அழியும் அபாயம் உருவாகலாம் என தற்போதை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென்குவின்களின் இனப்பெருக்க காலத்திற்கு முன் அண்டார்ட்டிக் கடல் பகுதி வேகமாக உருகினால் பென்குவின்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
1948 மற்றும் 1970ஆம் ஆண்டுகளில் 150ஆக இனப்பெருக்க பென்குவின்களின் எண்ணிக்கை 1999ஆம் ஆண்டில் 20ஆக குறைந்துள்ளது. 2009ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|
Comments
Post a Comment