https://srk2581.blogspot.com
காரமான உணவு என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். தயிர் சாதத்திற்கு ஊறுகாய் சாப்பிடுவது நம் அனைவரது வழக்கமாகும். மேலும் சீசனில் கிடைக்கும் காய்களில் ஊறுகாய் போட்டு வைத்துக்கொண்டு பயன்படுத்துவது பல வீடுகளில் நடக்கும் ஒரு விஷயமாகும். நாம் சிறிதளவு மட்டுமே பயன்படுத்தும் இந்த ஊறுகாயினால் எத்தனைப் பலன்கள் இருக்கின்றன என்பதை இங்கு காண்போம்.
🍛 ஊறுகாயிலுள்ள ப்ரோபியோடிக் பாக்டீரியாக்கள், நமது உடலில் செரிமானத்திற்கு எதிராக உள்ள பாக்டீரியாக்களை கொல்ல உதவுகிறது.
🍛 வினிகர் பயன்படுத்தாமல் இயற்கையாகவே உப்பு சேர்த்து புளிக்க வைக்கப்பட்ட ஊறுகாய் செரிமானத்திற்கு உதவுகிறது.
🍛 ஊறுகாயில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் செல்களை எதிர்த்து போராடுகிறது. மேலும் நம் உணவில் உள்ள கெமிக்கல்களால் ஏற்படும் தீமைகளை குறைக்க உதவுகிறது.
🍛 ஊறுகாய், சட்னிகளில் இலை காய்கறிகளின் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. உதாரணமாக கொத்தமல்லித்தழை, கறிவேப்பில்லை மற்றும் கீரை வகைகள் போன்றவை. இதை சாப்பிடுவதால் வைட்டமின் சி, ஏ, கே, மற்றும் இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் கிடைக்கின்றது.
🍛 சிறிய மற்றும் பெரிய நெல்லிக்காய் ஊறுகாய்கள் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த ஊறுகாய்கள் ஆயுர்வேத அடிப்படையிலும் பரிந்துரைக்கப்படுகிறது. நிறைய குடும்பங்கள் நெல்லிக்காய் ஊறுகாயை செரிமானத்திற்காக சாப்பிட்டு வருகின்றனர்.
🍛 வினிகர் கொண்ட ஊறுகாய்களை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது. இருப்பினும் நீரிழிவு நோயாளிகள் அதிக அளவு உப்பு உள்ள ஊறுகாய்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஊறுகாய்களில் உள்ள அதிக அளவு உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
🍛 நெல்லிக்காய் ஊறுகாய் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இதிலுள்ள சத்துக்கள் கல்லீரலை பாதுகாக்கவும் உதவியாக உள்ளது.
https://srk2581.blogspot.com
Comments
Post a Comment