Skip to main content

அழகுக் குறிப்புக்கள்.

பெண்கள் வீட்டில் சுலபமாகச் செய்து கொள்ளக்கூடிய அழகுக் குறிப்புக்கள்.

“எட்டில் அழகு பதினெட்டில் அழகு எந்தப்பெண்ணும் இருபதில் இரட்டை அழகு”அட பதினெட்டு என்ன பெண்கள் என்றால் எந்த வயதிலும் ஒரு அழகுதாங்க. பெண்களின் அழைகக் கவிபாடாத கவிஞர்கள் உண்டா? ஆனால் இன்றைய பெண்கள் வீட்டு வேலையுடன் வேலைக்கும் செல்லவேண்டி இருப்பதால் அவர்கள் தங்களின் அழகைப் பராமரிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகின்றனர்.அப்படி அவசரமாய் இயங்கிங்கொண்டிருக்கும் பெண்களுக்கு சுலபமாகச் செய்யக்கூடிய அழகுக் குறிப்புக்கள் இதோ.இரவு வேளையில் உறங்கச் செல்வதற்கு முன் முகம், கை மற்றும் கால்களை நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும். கை மற்றும் கால்களில் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசரைக் கொண்டு மசாஜ் செய்தால் மென்மையாகவும், நல்ல நிறமாகவும் இருக்கும்.பாலில் சிறிதளவு மஞ்சள் மற்றும் கடலை மாவைக் கலந்து குளித்து வந்தால் நல்ல நிறம் கிடைக்கும்.

உருளைக்கிழங்கின் சாறை முகத்தில் தடவினால், பிளீச்சிங் செய்த பலன் கிடைக்கும்.
பீட்ரூட்டை சிறு துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுத்து முகத்தில் தடவி 5 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்களுக்குப் பிறகு லேசாகக் கழுவி விட்டு, கடலை மாவால் மென்மையாகத் தேய்த்து பின் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

கண் இமைகளில் பாதாம் அல்லது விளக்கெண்ணெயை இரண்டு துளிகள் விட்டுத் தூங்கினால், கண் இமை கருப்பாக நீண்டு வளரும்.
குளித்தபின் கைகளில், கிளிசரின் மற்றும் பன்னீர் கலந்து தடவினால் கைகள் மென்மையாக மாறும்.
சந்தனம், 4 சொட்டு ரோஸ்வாட்டர், 5 சொட்டு பால் கலந்து முகத்தில் பூசி விட்டு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி பொலிவாக இருக்கும்.

உதடுகளில் பாலாடையைத் தடவி வந்தால், வறண்டு போன உதடுகள் மென்மையாக மாறும்.
பயிற்றுமாவு, கஸ்தூரி மஞ்சள் சம அளவு எடுத்து தயிர் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது ஒரு சிறந்த ஃபேஷியல்.
களைப்படைந்த கால்களை மிதமான உப்புக் கலந்த சுடுநீரில் 5 நிமிடம் ஊறவைத்து, பின் சிறிதளவு தேங்காய் எண்ணெயைத் தடவி விட்டு தூங்கினால் இரவில் ஆழ்ந்த உறக்கம் வரும்.

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு கருவேப்பிலை, காய்ந்த நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி இலை ஆகியவற்றைக் கலந்து, கொதிக்கவைத்து, பின்னர் ஆற விடவும். இதனை தினமும் கூந்தலுக்குத் தடவிவர கருமையாக, பளபளப்பாக மாறும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் பாலாடையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் வறண்ட தன்மை மாறி முகம் பளபளப்பாகும்.https://srk2581.blogspot.com

Comments

Popular posts from this blog

பனங்கிழங்கின் பயன்கள்!

✦ பனங்கிழங்கு குளிர்ச்சித் தன்மை உடையது. மலச் சிக்கலைத் தீர்க்கக் கூடியது. ✦ கிழங்கை மாவாக்கி அதோடு கருப்பட்டியும் சேர்த்து உருண்டை பிடித்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலு கிடைக்கும். ✦ கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மாவாக்கி சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் பருமனாகும். ✦ பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் வலுவடையும். ⚡பனங்கிழங்கு ..!!⚡  இப்போது பனம் கிழங்கு காலம் . எல்லோர் வீட்டிலும் எல்லா இடங்களிலும் பனம் கிழங்கை காணலாம் . பனம் கிழங்கை விரும்பாதோர் எவரும் இல்லை . எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் . ✦ மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது இந்த பனம் கிழங்கு . பனம் கிழங்கை அவித்து சும்மாவும் சாப்பிடலாம் . வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு துவைத்தும் உண்ணலாம் . கூடுதலாக பல்லு இல்லாதவர்கள் இப்படி உண்பார்கள் . ✦ பனம் பழங்கள் கிடைக்கும் காலங்களில் விதைகளைச் சேமித்து வைக்கும் மக்கள், உரிய காலத்தில் மண்ணைக் குவித்து மேடை போல அமைத்து, அதன்மேல் பனம் விதைகளைப் பரவி விடுவர். விதை முளைத்துக் கிழங்கு உருவானதும் அதனைக்

IELTS READING SAMPLES FOR GENERAL TRAINING

IELTS READING SAMPLES FOR GENERAL TRAINING   ROBOTS AT WORK   A The newspaper production process has come a long way from the old days when the paper was written, edited, typeset and ultimately printed in one building with the journalists working on the upper floors and the printing presses going on the ground floor. These days the editor, subeditors and journalists who put the paper together are likely to find themselves in a totally different building or maybe even in a different city. This is the situation which now prevails in Sydney. The daily paper is compiled at the editorial headquarters, known as the prepress centre, in the heart of the city, but printed far away in the suburbs at the printing centre. Here human beings are in the minority as much of the work is done by automated machines controlled by computers. B Once the finished newspaper has been created for the next morning’s edition, all the pages are transmitte

வயிற்றை சுத்தம் செய்வது எப்படி?

kutty maruthuvam ஸ்ரீ கோரக்கர் சித்தர் எழுதிய "ரவிமேகலை" நூலில் இருந்து... புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை வாய்மையாற் காணப் படும்.. என்ற குறள் உடலின் தூய்மை மற்றும் மனதின் தூய்மை பற்றி வலியுறுத்துகிறது. இந்த அகத் தூய்மை மற்றும் புறத்தூய்மை தாண்டிய மூன்றாவது ஒரு தூய்மை குறித்து சித்தர் பெருமக்கள் பேசுகின்றனர். அதுவும் அகத் தூய்மைதான். நம் உடலின் உள்ளுறுப்புகளை பற்றியது அது. பிறந்த நிமிடம் முதல் இறுதி மூச்சுவரை ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உள்ளுறுப்புகளின் தூய்மை மற்றும் ஓய்வினை சித்தர் பெருமக்கள் உணர்ந்திருந்தனர். அதன் பொருட்டே சீரான இடைவெளிகளில் உபவாசம் எனும் உண்ணா நோன்பினையும், உள்ளுறுப்புகளை சுத்தி செய்யும் வகைகளையும் வரையறுத்துக் கூறியிருக்கின்றனர். அந்த வகையில் இன்று வயிற்றினை சுத்தம் செய்யும் முறை பற்றி பார்ப்போம். நம் உடலிற்குத் தேவையான சத்துகள் நாம் உண்ணும் உணவில் இருந்தே பெறுகிறோம். உணவில் இருந்து சத்துக்களை உடலுக்கு பிரித்தளிக்கும் வேலையை செய்வது நமது வயிறு. இதனை தூய்மையாய் வைத்திருந்தால் உடல் ஆரோக்கியத்தை