https://srk2581.blogspot.com
தலையில் தேங்கி கிடக்கும் இறந்த செல்கள் பொடுகு மற்றும் செதில் செதிலான சருமத்தை நமக்கு தருகிறது. தலையில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பிசுக்கு ம் பொடுகு ஏற்பட ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. இந்த பொடுகை அப்படியே விட்டு விட்டால் தலை அரிப்பு, புண்கள் உண்டாகி இரத்தம் வெளியேறுதல் போன்ற தீவிர பாதிப்புகளும் உண்டாகிறது.
சர்க்கரை ஸ்க்ரப்
இந்த ஸ்க்ரப் தலையில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை போக்குகிறது. ஆலிவ் ஆயில், சர்க்கரை மற்றும் கொஞ்சம் உப்பு சேர்த்து இந்த ஸ்க்ரப்பை தயார் செய்யுங்கள். தலையில் இதை அப்ளே செய்து நன்றாக வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு சாதாரண நீர் கொண்டு தலையை அலசுங்கள். இந்த ஸ்க்ரப் தலையில் தோன்றும் சரும வடுக்கள் மற்றும் பொடுகு போன்றவற்றிற்கு நல்ல பலனளிக்கும். இதை வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
சர்க்கரை மற்றும் கற்றாழை ஜெல்
கற்றாழை தலையில் உள்ள வறண்ட சருமத்தை நீக்கி பொடுகை யும் நீக்குகிறது. ஒரு ப்ரஷ்ஷான கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பெளலில் போட்டு அதனுடன் சர்க்கரையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை தலையில் அப்ளே செய்து நன்றாக ஸ்க்ரப் செய்யுங்கள். 30 நிமிடங்கள் கழித்து நன்றாக கழுவவும். இது தலைமுடி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது. தலைக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து பொடுகு தொல்லை யை போக்குகிறது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சர்க்கரை மற்றும் ஷாம்பு
தலையில் உள்ள இறந்த செல்களை நீக்குவது ஆரோக்கியமான சருமத்திற்கு மிகவும் முக்கியம். இது ஒரு எளிமையான முறை. இதற்கு என்று நிறைய மெனக்கெடல்களை நீங்கள் செய்ய வேண்டாம். தினமும் தலைக்கு குளிக்கும் போது சாம்புடன் கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து கொள்ளுங்கள். இந்த கலவையை கொண்டு தலையில் தேய்த்து நன்றாக குளியுங்கள். வாரத்திற்கு ஒரு முறை என இதை செய்து வந்தால் இறந்த செல்கள் நீங்கி தலை சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
சர்க்கரை மற்றும் எஸன்ஷியல் ஆயில்
சர்க்கரை மற்றும் எஸன்ஷியல் ஆயிலை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இது பொடுகை போக்குவதோடு உங்கள் கூந்தலுக்கும் நல்ல நறுமணத்தை கொடுக்கும்.
8-10 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 5 டேபிள் ஸ்பூன் திராட்சை விதை எண்ணெய், 3-4 சொட்டுகள் ரோஸ் மேரி ஆயில், லெமன் எஸன்ஷியல் ஆயில் இவற்றையெல்லாம் ஒரு பெளலில் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். நல்லா கூந்தலின் வேர்ப்பகுதி வரை தடவி மசாஜ் செய்யுங்கள். சில நிமிடங்கள் மசாஜ் செய்து விட்டு ஒரு மணி நேரம் விட்டு விடுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவி விடுங்கள். 15 நாட்களுக்கு ஒரு முறை என செய்து வந்தால் சீக்கிரம் பொடுகை போக்கி ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.
ப்ரவுன் சுகர் மற்றும் ஆலிவ் ஆயில்
உங்களுக்கு நீண்ட நாட்களாக பொடுகுத் தொல்லை இருந்தால் அதற்கு இந்த முறை மிகவும் சிறந்தது.
2 டேபிள் ஸ்பூன் ப்ரவுன் சுகர் மற்றும் ஆலிவ்
ஆயில் சேர்த்து கலந்து கொள்ளவும். 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலை லேசாக சூடுபடுத்தி கொள்ளுங்கள். இதனுடன் கொஞ்சம் சர்க்கரையும் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு ஆறியவுடன் தலையில் அப்ளே செய்து மசாஜ் செய்யவும். 30-45 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு பிறகு சாதாரண நீரில் கழுவி விடுங்கள்.

Comments
Post a Comment