பித்தவெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் இவைதான்! தீர்வு என்ன தெரியுமா?
இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க”என்ற கம்பன் வரிகள் நினைவுள்ளதா? அந்தளவு மென்மையான கால்களை, பாதங்களைக் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். பாதம் என்றவுடன் பெரும்பாலானவர்களுக்கு தற்போது இருக்கின்ற பெரும் பிரச்சினைகளில் ஒன்றுதான் இந்த பித்த வெடிப்புக்கள்.
பித்த வெடிப்பு ஏன் எதனால் ஏற்படுகின்றது? பாதங்களுக்கு போதிய கவனத்தை செலுத்தாததாலும் சுத்தமாக இல்லாததாலும் தான் பித்த வெடிப்பால் பலரும் கஷ்டப்படுகின்றனர்.ஊட்டச்சத்து குறைபாடுகளினால் கூட சில நேரங்களில் பித்த வெடிப்பு உண்டாகலாம் சிலருக்கு சவர்க்காரத்தில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும்.
சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் கால் வெடிப்புகள் வரும்கால்களின் சருமத்தின் உலர்ந்த தன்மை, குதிக்கால் தோல் தடித்துக் கடினமாகக் காணப்படுதல், உடல் நிறைச் சுட்டி அதிகரித்தல், நீண்ட நேரம் நிற்றல், நடத்தல், தோலின் வளையும் தன்மை குறைவாக இருத்தல் ஆகியவற்றாலும் பித்த வெடிப்பானது ஏற்படுகின்றது
குதிக்கால் மூடப்படாத செருப்பு வகைகளை அணிதல், அருந்தும் நீரின் அளவு குறைதல், குளிரான காலநிலை, தைரொயிட் சுரப்பி நோய்கள், நீரிழிவு நோய் போன்ற காரணிகளாலும் பித்த வெடிப்பானது ஏற்படுகின்றது.
பித்த வெடிப்பு ஏற்பட்ட பாதங்களை கவனிக்கவேண்டிய முறைகள்!
இரவில் இதமான சூட்டில் உள்ள வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை ஊற வைத்து, பிரஷினால் தேய்க்கவும். கால் வெடிப்பு மறையும் வரைக்கும் செய்யவும். குளிக்கும்போது தேங்காய் எண்ணை தேய்த்து குளிக்கவும். (கடையில் மெட்டல் ஸ்க்ரப்பர் கிடைக்கும் அதை வாங்கி தினமும் குளிக்கும்போது கால் பாதங்களை தேய்க்கவும் சரியாகிவிடும்.) அல்லது (கால்களுக்கு தேய்க்கும் ப்ரஷ் அல்லது ப்யூமிஸ் ஸ்டோன் கொண்டு தேயுங்கள். பின் கால்களை துடைத்துவிட்டு பாத க்ரீம் போட்டு மசாஜ் செய்யுங்கள்.
ஒரு தேக்கரண்டி நீர்க்காத கிளிசரின், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து உங்கள் பித்த வெடிப்பின் மீது தடவுங்கள். இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விட்டு, காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் காலை கழுவி விடுங்கள்.
இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி அரிசியை எடுத்து, அதனுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து அடர்த்தியான பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் பித்த வெடிப்புடன் வறண்டு காணப்பட்டால், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளவும்.
வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 10 நிமிடம் வரை ஊற வைத்து, பின் அந்த பேஸ்ட்டை வைத்து மெதுவாக பாதத்தில் தேய்க்கவும். அப்படி செய்யும் போது பாதங்களில் உள்ள இறந்த அணுக்கள் நீங்கிவிடும்.

Comments
Post a Comment