வேப்பமரம் நமது தேசத்தில் தான் எங்கும் காணப்படுகிறது. இமயம் முதல் குமரிவரை இந்த வேப்பமரத்தைக் காணலாம் .
ஆனால் மேல் நாடுகளிலும் , கீழ்நாடுகளிலும் வேப்பமரம் அவ்வளவாகச் செழித்து வளர்வதில்லை . செழித்து வளர்வதற்கு உரிய காலநிலை அங்கே காணப்படுவதில்லை.
தாவரவியல் பெயர் அசாடிரக்டா இன்டிகா (AZADIRACHTA INDICA Adv.Juss ). தாவரக்குடும்பம் மீலியேசி (Meliaceae).
பாகங்கள்:
வேப்ப மரத்தின் இலை, பூ, காய், பழம், கொட்டை, பருப்பு, எண்ணெய் பட்டை, கட்டை என்ற எல்லா விதமான பாகங்களுமே வைத்திய முறைக்கு நன்கு பயன் பட்டு வருகிறது .
பார்வை :
சுவாசம்: பச்சைப் பசேல் என்று இருக்கும் வேப்பமரத்தைத் தினசரி எழுந்தவுடன் கண் குளிரப் பார்த்து அதன் காற்றைச் சுவாசித்து வருபவர்களுக்கு, கண் சம்பந்தமான நோய்களும், சுவாச உறுப்புகள் சம்பந்தமான நோய்களும் வருவதில்லை .
சுவாச உறுப்புகள் சுத்தமடையும். கண் பார்வை தெளிவடையும்.
கண் பார்வை குறைந்தவர்கள் பசுமையான வேப்ப மரத்தைத் தினசரி 40 நாட்கள் வரை காலையிலும், மாலையிலும் அரை மணி நேரம் பார்த்து வருவார்களானால் அவர்கள் பார்வை தெளிவடையும் .
சர்வரோக நிவாரணி : இத்தகைய சிறப்பு வாய்ந்த வேப்பமரத்தைப் புகழ்ந்து ஒரே வார்த்தைகளில் கூற வேண்டுமானால் , இதை ஓர் சர்வரோக நிவாரணி எனலாம் .
சர்வம் என்றால் அனைத்தும் என்று பொருள். ரோகம் என்றால் நோய் என்று பொருள். நிவாரணி என்றால் தீர்க்கக் கூடியது என்று பொருள் . சர்வரோக நிவாரணி என்றால் அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கக் கூடியது என்று பொருள் .
வேப்ப மரத்தைத் தெய்வமாக எண்ணி அதை வழிபட்டு வரும் பழக்க வழக்கங்கள் நம் நாட்டில் இன்றளவும் இருந்து வருகிறது . அதற்கு முக்கிய காரணம் அம்மரத்தினிடமுள்ள நோய் தீர்க்கும் சக்தியே ஆகும் .
மனது: மனதிற்கும் வேப்பமரத்தில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் நெருங்கிய அதிகமான பல்வேறு வகையான தொடர்புகள் உண்டு .
வேப்பமரத்தின் அடியில் காலை , மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் உட்கார்ந்து கொண்டே வந்தால் மனம் சாந்த நிலையை அடையும். மனதில் ஒரு புத்துணர்ச்சி உண்டாகும் . மனதில் ஒரு மகிழ்ச்சி உண்டாகும் . மனதில் ஒரு தெம்பு உண்டாகும்.https://srk2581.blogspot.com
Comments
Post a Comment