Skip to main content

Posts

Showing posts from September, 2018

திருக்குறள்-28

திருக்குறள்

கூந்தல் அழகுக் குறிப்புகள்

https://srk2581.blogspot.com https://srk2581.blogspot.com கூந்தல் அழகுடன் விளங்க ஆலோசனைகள் சில:  கூந்தல் பளபளக்க 1. கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும். தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று இருக்கின்றன. இந்த ஹேர் ஆயில்களெல்லாம் தலைமுடியின் ஆயுளைக் குறைத்து விடுகின்றன. சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காயெண்ணையும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது. 2. சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும். 3 . தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். ஆகவே மறுநாள் காலையில் விழா என்றால் முதல் நாள் இரவில் கூந்தலை சீராக்குவது அவசியம். முதல் நாள் மாலையில் கூந்தலை எப்போதும் போல் ஷாம்பு மற்றும் சீயக்காய் வைத்து அலசி விடவும்.  அடுத்தநாள் கூந்தலை அலசி, துடைத்து விட்டு அலங்க...

புற்றுநோயை விரட்டும் மாம்பழம்!

https://srk2581.blogspot.com https://srk2581.blogspot.com பழங்களின் அரசனான மாம்பழத்திற்குப் புற்றுநோயைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதாக லக்னோவிலிருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மையம் ITRC (Industrial Toxicology Research Center) நிபுணர்கள் அறிவித்துள்ளனர். மருத்துவத்துறையில் மாங்காய் /  மாம்பழத்தின் உபயோகத்தைக் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு வழிவகுக்கும் இப்புதிய கண்டுபிடிப்பு நடந்துள்ளது.  ITRC-யில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் புற்றுநோய் பாதித்த சுண்டெலிகளுக்கு மாங்காய் கொடுத்து ஆய்ந்த பொழுது மிகப்பெரிய மாற்றங்கள் அவைகளில் நிகழ்ந்ததை கண்டறிந்தனர். மாங்காய் / மாம்பழம் சாப்பிட்டபின் சுண்டெலிகளின் புற்றுநோய் பாதித்த கட்டி(Tumour)கள் பெருமளவில் குறையத் தொடங்கின.  பின்னர் நடத்திய ஆய்வில் மாங்காய் / மாம்பழத்தில் அடங்கியுள்ள லூபியோல்(Lupeol) என்ற ரசாயனப்பொருள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதாக நிபுணர்கள் கண்டுபிடித்தனர். புற்றுநோய்க் கட்டிகளைக் குறைப்பதோடு மட்டுமின்றி பல்வேறு சுகாதாரப் பிரச்சி...

காமாலை நோய்க்கு எலுமிச்சை

https://srk2581.blogspot.com https://srk2581.blogspot.com எலுமிச்சைச் சாறுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை, கண் நோய், ஆரம்ப கால யானைக்கால் நோய் ஆகியவை குணப்படும். எலுமிச்சம் பழங்களை ஊறுகாய் போடும் முறை தவறானது. கிச்சிலி மற்றும் நார்த்தங்காய் போன்ற எலுமிச்சங் காய்களையே ஊறுகாய் தயார் செய்ய சிறந்ததாகும். எலுமிச்சம் பழத்தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவுக்கு பொரித்த படிகாரம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் ஏற்படும் தேமல் என்ற சரும நோய்க்கு இப்பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குழைத்து இரவு நேரத்தில் தேகத்தின் மேல்பூசி காலையில் குளித்து வர விரைவில் தேமல் மறையும்.

ரத்த விருத்தி தரும் வாழைக்காய்

https://srk2581.blogspot.com https://srk2581.blogspot.com வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தை தான் சமைப்பது வழக்கம். அதற்காக மற்ற வகை வாழைக்காய்களை சாப்பிடக் கூடாது என்பது கிடையாது. அவைகள் பரவலாக கிடைப்பதில்லை.  மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது. இதனால் உடல் பருக்கும். உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். பசியை அடக்கும். இதனுடன் மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் பயன்படும்.  வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும். உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். பொதுவாக கேரளத்தில் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கிறது.  இப்படி துவையலாக செய்து சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும். வாழைக்காய் சாப்பிடு வதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் ஆகியவையும் நீங்கும். ஆனால் வாய்வு மிகும...

இயற்கையை விட்டு விலகும் மனிதன்

https://srk2581.blogspot.comption https://srk2581.blogspot.com நாம் உணவு குறித்து நிறைய ஆய்வுகள் நடத்தி இருக்கிறோம். ஆதி மனிதனின் உணவு குறித்தும், நவீன மனிதனின் உணவு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. ஐந்து, ஆறு வகையான தானியங்களை மட்டுமே இன்று மனிதர்கள் உண்கிறார்கள். கிழங்குகளை நாம் முற்றிலும் கைவிட்டுவிட்டோம். கிழங்காக இன்று உருளைக் கிழங்கு மட்டுமே பாக்கியிருக்கிறது. தவிர்க்க முடியாமல் வீடுகளில் ஒரு துண்டு சேப்பங்கிழங்கோ, சேனைக் கிழங்கோ சாப்பிடலாம். அதே நேரத்தில் பாப்வா நியூகினியாவில் ஆதிவாசிகள் ஏறத்தாழ 160 வகையான தாவரங்களை வளர்த்து உணவாகப் பயன்படுத்துகிறார்கள். இதில் என்ன வித்தியாசம் என்று கேட்டால், நம் முன்னோர்கள் ஒரு ஆகாரத்தை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழவில்லை. ஒரு குரங்கு என்னவெல்லாம் உண்கிறது என்று பார்க்கும்போது அவை பழங்களை மட்டும் உண்ணவில்லை, ஒரு பழத்தை மட்டும் தின்னவில்லை. மொட்டுகளைத் தின்பதுண்டு. பூக்களைத் தின்கிறது. எறும்பைப் பிடித்து தின்கிறது. பல விதமான உணவுகளை செரிப்பதற்கானதுதான் அவற்றின் உணவுக் குழாய். இதில் இருந்து நாம் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும். சத்தான உ...

திருக்குறள்-27

திருக்குறள்

திருக்குறள்-26

திருக்குறள்

கரிசலாங்கண்ணி

விஷம் இறங்க... கரிசலாங்கண்ணி இ https://srk2581.blogspot.com லையை இடித்து சாறு பிழிந்து ஒரு அவுன்ஸ் மோரில் கலந்து குடித்தால் பாம்புகடி விஷம் உள்பட எந்த விஷ கடியானாலும் விஷம் இறங்கும். பெண்கள் இடுப்பில் புண் குணமாக... பெண்கள் இடுப்பில் புடவை கட்டும் இடத்தில் இறுக்கி கட்டுவதால் ஏற்படும் புண் கடுக்காயை கல்லில் உரசி தடவி வந்தால் குணமாகும். குழந்தைகளுக்கு வயிற்று கோளாறு நீங்க... முருங்கை இலையை கசக்கி சாறு எடுத்து சிறிது சூடுகாட்டி அரைசங்கு ஊற்றினால், வயிற்று உப்பிசம், மலக்கட்டு மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். வெட்டுக்காயம் குணமாக... இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது போட்டு வர வெட்டுக்காயம் குணமாகும். ஆரம்ப கர்ப்ப சிதைவை தடுக்க... கர்ப்ப தாய்மார்கள் அத்திபழம், தேன் சிறிதளவு உப்பு சேர்த்து உண்டு வந்தால் ஆரம்ப கர்ப்ப சிதைவிலிருந்து விடுபடலாம்.

ஜாதிக்காய்

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயக்கராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம். செயல்திறன் மிக்க வேதிப்பொருள்: ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பைனென், பீட்டா - டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப்ரோல். ஜாதிக்காய் வெண்ணெயில் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய எண்ணெய் காணப்படுகிறது. ஜாதிபத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண்ணெய் வகைகள் என்றாலும் இவற்றில் மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது. முகத்தை அழகாக்கும்: ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது. அம்மை கொப்புளங்கள் சரி...

பித்தவெடிப்பு

https://srk2581.blogspot.com பித்தவெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் இவைதான்! தீர்வு என்ன தெரியுமா? இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க”என்ற கம்பன் வரிகள் நினைவுள்ளதா? அந்தளவு மென்மையான கால்களை, பாதங்களைக் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். பாதம் என்றவுடன் பெரும்பாலானவர்களுக்கு தற்போது  இருக்கின்ற பெரும் பிரச்சினைகளில் ஒன்றுதான் இந்த பித்த வெடிப்புக்கள். பித்த வெடிப்பு ஏன் எதனால் ஏற்படுகின்றது? பாதங்களுக்கு போதிய கவனத்தை செலுத்தாததாலும் சுத்தமாக இல்லாததாலும் தான் பித்த வெடிப்பால் பலரும் கஷ்டப்படுகின்றனர்.ஊட்டச்சத்து குறைபாடுகளினால் கூட சில நேரங்களில் பித்த வெடிப்பு உண்டாகலாம் சிலருக்கு சவர்க்காரத்தில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் கால் வெடிப்புகள் வரும்கால்களின் சருமத்தின் உலர்ந்த தன்மை, குதிக்கால் தோல் தடித்துக் கடினமாகக் காணப்படுதல், உடல் நிறைச் சுட்டி அதிகரித்தல், நீண்ட நேரம் நிற்றல், நடத்தல், தோலின் வளையும் தன்மை குறைவாக இருத்தல் ஆகியவற்றாலும் பித்த வெடிப்பானது ஏற்படுகின்றது ...

தேனில் உள்ள சத்துக்கள்

தேனில் உள்ள சத்துக்கள்: நீர்=23% மாவுப்பொருள்=76% புரதம்=4% கால்சியம்=5% இரும்பு=0.4% வைட்டமின் B2=0.05 யூனிட் வைட்டமின் C=0.5 யூனிட் நியாசின்=0. 2 யூனிட் மற்றும் சோடியம், பொட்டாசியம், சல்பர், மக்னீசியம் உள்ளன. இவை அனைத்தும் 100 கிராம் தேனில் உள்ள சத்துக்கள். மருத்துவக் குணங்கள் டிபி, சளி, இருமல் குணம் அடையும். உடல் பருமன்,தொப்பை குறையும். நோஞ்சான் அன்பர்கள் தேன் நீரால் உடல் எடை பெறுவர். நோயாளிகள், சிறுவர்களுக்கு, குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. இதயம், ஈரல் பலம் பெறும். குரல் வளம். கண் ஒளி மிகும். எல்லாப் பிணிகளும் விலகுகின்றன. குறிப்பு: ஒரு கிலோ கிராம் தேன் ஐந்து லட்சம் மலர்களில் இருந்து பெறப்படுகிறது. தேனும், நெய்யும் கலக்க கூடாது. கலந்தால் அது நஞ்சாகும். தேனும், முட்டையும் கலக்கக்கூடாது. தேனும், சீனியும் கலக்கக்கூடாது. தேன் சூடாகும் போது சத்துகளை இழந்துவிடும். https://srk2581.blogspot.com

புடலங்காய்

புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் பயன்கள்... ✦ உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும். ✦ புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் அஜீரண கோளாறு நீங்கும். பசியைத் தூண்டும். ✦ குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும். ✦ இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும். மூலநோய்க் காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும். ✦ நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். ✦ ஆண்மை கோளாறுகளை நிவர்த்தி செய்யும் புடலங்காய் விந்துவை கெட்டி படுத்தும். புடலங்காய் சாப்பிடுவதால் காம உணர்வு அதிகரிக்கும். உடல்  தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும். ✦ பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளைப் போக்கும். ✦ காய்ச்சல் உள்ளவர்கள் புடலங்காயைக் கொதிக்க வைத்த டிகாக்‌ஷன...

மத்தி மீன்

srk2581 தமிழக கடலோரப் பகுதிகளில் அதிகளவில் கிடைத்தாலும் இவைகள் பெருமளவில் கேரளாவிற்கு தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றது,  கேரளா மக்கள் இந்த மத்தி மீன்களின் மருத்துவ குணங்களை அறிந்து மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர். மத்தி மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள். நாகை மீன்வள பல்கலைக்கழக தொழிலில் நுட்பநிலைய இயக்குனர் நாகூர் மீரான், பேராசிரியர் கணேசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல்வரை மத்தி மீன்கள் கிடைக்கிறது. விலையும் மிக மலிவாக ரூ.15 முதல் ரூ.20க்குள் கிடைக்கும். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது. 100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும் உள்ளது. மத்தி மீன்களில் ‘ஒமேகா 3‘ கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை க...

திருக்குறள்-25

திருக்குறள்

கேழ்வரகு கூழ்

சத்துடன் குளிர்ச்சி அளிக்கும் கேழ்வரகு கூழ் கேழ்வரகுவில் கூழ் செய்யும் போது அதன் சத்துக்கள் மேலும் அதிகரிக்கிறது. கேழ்வரகை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் என்றுமே நம்முடன். சத்துடன் குளிர்ச்சி அளிக்கும் கேழ்வரகு கூழ் கடந்த தலைமுறைகளில் சிறுதானியங்கள் மறந்து போய் விட்டிருந்தாலும், அவற்றுள் மறக்கப்படாமல் உபயோகப்படுத்தப்பட்டு வந்த ஒரு சிறுதானியம் கேழ்வரகு. கேழ்வரகு ஒரு முழு தானியம் மட்டுமின்றி முழுமையான தானியமும் ஆகும். இது மிக நுண்ணியதாய் இருப்பதால் இதன் தோல் நீக்கப்படுவதோ பாலிஷ் செய்யப்படுவதோ இல்லை. மேலும் இதன் எந்த பகுதியும் நீக்கப்படுவதும் இல்லை. எனவே இதன் சத்துக்களில் எந்த இழப்பும் ஏற்படாமல் பயன்படுத்தப்படுகிறது. கேழ்வரகுவில் க்ளூட்டன் என்ற புரதம் கிடையாது. பால், க்ளூட்டன் போன்றவைகளின் ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒன்று கேழ்வரகு. கேழ்வரகுவில் கூழ் செய்யும் போது அதன் சத்துக்கள் மேலும் அதிகரிக்கிறது. கேழ்வரகு மாவில் கூழ் செய்வது மிகவும் எளிது. முதலில் அரிசி நொய் அல்லது சிறுதானிய அரிசியை முதலில் வேக வைத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த...

கண் கருவளையத்தை போக்க சில எளிய அழகு குறிப்புகள்...

✦ அதிக நேரம் வெயிலில் அலைவதால் உடலும் மிகவும் மென்மையான தோலான கண்களுக்கு அடியில் உள்ள தோலும் பாதிப்படைகிறது. இதனால் கருவளையம்  ஏற்படுகிறது. ✦ பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து அதில் பஞ்சை நனைத்து கண்களில் வைத்து சிறிது நேரம் கழித்து கண்களைக் கழுவினால் கண் கருவளையம் மறையும். ✦ மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கடியில் மசாஜ் செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும். ✦ கேரட்டை வெட்டி கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்தால் கருவளையம் மறையத் தொடங்கும். ✦ கண் கருவளையத்திற்கு வயது மிகவும் முக்கியமான காரணமாகும். வயது அதிகமானால் தோலில் தொய்வு ஏற்பட்டு கண் கருவளையம் ஏற்படும். ✦ எலுமிச்சை சாறை பஞ்சில் நனைத்து கண்ணுக்கு அடியில் ஒத்தி எடுக்க வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் கருவளையம் மறையும். ✦ புதினாவை அரைத்து அந்த விழுதை கருவளையத்தில் தடவினால் கருவளையம் மறையும். ✦ குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து கண்களில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கருவளையம் மறையும். ✦ ஆலிவ் ஆயில் கொண்டு கண்களில் மசாஜ் செய்தால் கண்கள் களைப்பு நீங்கி கருவளையம் மறையும் https://srk2581.blogspot.com

பனங்கிழங்கின் பயன்கள்!

✦ பனங்கிழங்கு குளிர்ச்சித் தன்மை உடையது. மலச் சிக்கலைத் தீர்க்கக் கூடியது. ✦ கிழங்கை மாவாக்கி அதோடு கருப்பட்டியும் சேர்த்து உருண்டை பிடித்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலு கிடைக்கும். ✦ கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மாவாக்கி சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் பருமனாகும். ✦ பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் வலுவடையும். ⚡பனங்கிழங்கு ..!!⚡  இப்போது பனம் கிழங்கு காலம் . எல்லோர் வீட்டிலும் எல்லா இடங்களிலும் பனம் கிழங்கை காணலாம் . பனம் கிழங்கை விரும்பாதோர் எவரும் இல்லை . எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் . ✦ மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது இந்த பனம் கிழங்கு . பனம் கிழங்கை அவித்து சும்மாவும் சாப்பிடலாம் . வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு துவைத்தும் உண்ணலாம் . கூடுதலாக பல்லு இல்லாதவர்கள் இப்படி உண்பார்கள் . ✦ பனம் பழங்கள் கிடைக்கும் காலங்களில் விதைகளைச் சேமித்து வைக்கும் மக்கள், உரிய காலத்தில் மண்ணைக் குவித்து மேடை போல அமைத்து, அதன்மேல் பனம் விதைகளைப் பரவி விடுவர். விதை முளைத்துக் கிழங்கு உருவானதும் அத...

பற்களை வெண்மையாக வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்

பற்களில் இருக்கும் வெண்மை கூட  ஒருவரது ஆளுமையின் திறனை சொல்லும். முறையில்லாத உணவு பழக்கங்களால் பற்களில் காணப்படும் எனாமல் மற்றும் வெண்மை தன்மை குறைந்துவிடும். எனவே குறைந்த செலவில் வீட்டிலிருக்கும் சில பொருட்களை வைத்து பற்களை வெண்மையாக பராமரிக்கலாம். அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம். 1) நம் உருவத்திற்கு அடையாளமாக இருக்கும் தலையின் கேசத்திற்கு மட்டுமில்லை, பற்களின் வெண்மைக்கும் பலன்அளிக்கும் ஒரு  சிறந்த பொருள் தேங்காய் எண்ணெய். ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை வாயிற்குள் ஊறி, 3 அல்லது 4 நிமிடங்கள் வரை கொப்பளித்து துப்ப வேண்டும். இப்படி செய்வதால் பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் உங்கள் டூத்பிரஸ்ஸில் தேங்காய் எண்ணெய்யை படரச்செய்து அதை தேயிப்பதாலும் பலன் ஏற்படும். 2) நோய் கிருமிகளை அழிக்கும் திறன் பெற்றது தான் ஆப்பிள் சிடார் வினீகர். இதை கையில் எடுத்து பற்களில் சில நிமிடங்கள் தேயிக்க வேண்டும், இப்படி செய்வது வருவதாலும் பற்கள் வெண்மை அடையும். 3) பொருட்களை சுத்தப்படுவதற்கு உள்ள இயற்கையான பொருட்களில் முக்கியமானது எலுமிச்சை பழம். இதனுடைய தோளை எடுத்து, பற்...

ஆப்பிளின் மருத்துவப் பயன்கள்

✦ ஆப்பிள் பழம் தினம் ஒன்று சாப்பிடுங்கள். மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை. ✦ கலோரிகளில் குறைவானது ஆப்பிள். கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது. ✦ தேவையான அளவு ஆப்பிள் பழத்தை எடுத்து இட்லி வேகவைப்பது போல் நீராவியில் வேக வைத்து எடுத்துக்கொண்டு தேவையான அளவு தேன் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மூளைக்கு சக்தியளிக்கும். ✦ மூளையில் சோர்வு இருக்காது. சிறிது காலம் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து பூரண குணம் ஏற்படும். ✦ வறட்டு இருமல் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இருமல் தீரும். சரியான உடல் வளர்ச்சியும், சதைப் பிடிப்பும் இல்லாதவர்களும் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ஒல்லியான உடல் சீராகப் பருமன் அடைவார்கள். ✦ பல், ஈறுகள் கெட்டிப்படும். நரம்பு பலவீனம் நிவர்த்தியாகும். உடம்புக்குத் தேவையான முழு போஷாக்கையும் கொடுக்கும். ✦ இதய நோய் பாதிப்பு வராமல் செய்துவிடலாம். புற்றுநோய் வராமல தடுக்கும். உடம்பு செல்கள் புதுப்பிக்கப்படுகிறது...

குளிர்ச்சியை தரும் பச்சை பயிறு

புரோட்டின் சத்துக்களை அதிகம் கொண்ட பச்சை பயறை தினம் சாப்பிட உடலில் இருக்கும் அதிகமான வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரும். தோல் புற்று நோய் மற்றும் தோலில் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் பச்சை பயறு உதவும். ரத்த சோகையை குண படுத்தும் இரும்பு சத்துக்கள் பச்சை பயறில் அதிகம் காண படுகிறது. மேலும், இது முடி உதிர்வை தடுக்கிறது https://srk2581.blogspot.com

நெஞ்செரிச்சலா? இதை ட்ரை பண்ணுங்க...

நம்முடைய உணவுப்பழக்கம் மாற ஆரம்பித்த நாட்களிலிருந்து பல உடல்நல பிரச்சனைகள் மனிதர்களை வாட்டி வதைக்கிறது. அதிலும், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏராளம். அதிலும் பெரும்பாலானோருக்கு நெஞ்செரிச்சல் பிரச்சனை இருக்கிறது. இதற்கு சில தீர்வுகளை காண்போம். சீரகம் சீரகம் இரைப்பையில் அமில சுரப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் சீரகம் ஊற வைத்த நீரை குடித்து வாந்தால் நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அரிசி அரிசி உணவுகள் வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை உறிஞ்சும் ஆற்றல் கொண்டது. ஒரு நாளில் ஒரு வேளை உணவாவது அரிசி உணவாக எடுத்து கொள்ள வேண்டும். வாழைப்பழம் நெஞ்செரிச்சலை உடனடியாக குறைக்க வாழைப்பழம் சாப்பிடலா. வாழைப்பழத்திற்கு இயற்கையாகவே அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் உடனடி நிவாரணத்தை இது அளிக்கும். இஞ்சி இஞ்சி அமில சுரப்பை கட்டுப்படுத்துகிறது. அதோடு உணவு செரிமானத்திற்கு உதவுவதால் நெஞ்செரிச்சல் குறைந்திடும். ஓட்ஸ் ஓட்ஸில் குறைந்தளவிலான அமிலம் உள்ளது. நெஞ்செரிச்சல் ஏற்ப்பட்டு எந்த உணவினையும் சாப்பிட முடியாமல் இருந்தால் பயமின்றி ஓட்ஸ் சாப்பிடலாம். ...

21 நாள் தொடர்ந்து இந்த ஒரு பழம் மட்டும் சாப்பிடுங்க

21 நாள் தொடர்ந்து இந்த ஒரு பழம் மட்டும் சாப்பிடுங்க! ஆயுர்வேத மருத்துவத்தில் விளாம்பழம் அதிகம் உபயோகப்படுகிறது. பழம் மட்டுமல்லாது இதன் வேரும், இலைகளும் கூட மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இதன் இலைகளில் சபோரின், வைடெக்ஸின் காணப்படுகின்றன. பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு, டேரைகைன் போன்றவை காணப்படுகின்றன தினசரி ஒரு பழம் விதம் தொடர்ந்து 21 தினங்களுக்கு இப்பழத்தை சாப்பிட்டு வர எந்த விதமான பித்த வியாதிகளும் குணமடையும். விளாம்பழத்தின் நன்மைகள் விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது. சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும் தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது. தயிருடன் விளாம் காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், அல்சர் குணமடையும். மேலும் வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும். விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்...

திருக்குறள்-24

திருக்குறள்

ஆட்டுப்பாலின் மருத்துவ தன்மைகள்

பசும்பாலை விட ஆட்டுப்பாலில்தான் அதிகளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது. ஆட்டுப்பால் கிடைப்பது சற்று கடினம்தான். ஆனால் இது வழங்கும் பலன்கள் ஏராளம். ஆட்டுப்பால் தொடர்ந்து குடித்துவர எலும்புகள் வலுவடையும், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைபெறும், இதய ஆரோக்கியம் மேம்படும், சருமம் பொலிவடையும் அனைத்திற்கும் மேலாக ஆட்டுப்பால் குடிப்பது ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும்.

பொடுகு பிரச்னை இருக்கா?

https://srk2581.blogspot.com தலையில் தேங்கி கிடக்கும் இறந்த செல்கள் பொடுகு மற்றும் செதில் செதிலான சருமத்தை நமக்கு தருகிறது. தலையில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பிசுக்கு ம் பொடுகு ஏற்பட ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. இந்த பொடுகை அப்படியே விட்டு விட்டால் தலை அரிப்பு, புண்கள் உண்டாகி இரத்தம் வெளியேறுதல் போன்ற தீவிர பாதிப்புகளும் உண்டாகிறது.   சர்க்கரை ஸ்க்ரப் இந்த ஸ்க்ரப் தலையில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை போக்குகிறது. ஆலிவ் ஆயில், சர்க்கரை மற்றும் கொஞ்சம் உப்பு சேர்த்து இந்த ஸ்க்ரப்பை தயார் செய்யுங்கள். தலையில் இதை அப்ளே செய்து நன்றாக வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு சாதாரண நீர் கொண்டு தலையை அலசுங்கள். இந்த ஸ்க்ரப் தலையில் தோன்றும் சரும வடுக்கள் மற்றும் பொடுகு போன்றவற்றிற்கு நல்ல பலனளிக்கும். இதை வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.   சர்க்கரை மற்றும் கற்றாழை ஜெல் கற்றாழை தலையில் உள்ள வறண்ட சருமத்தை நீக்கி பொடுகை யும் நீக்குகிறது. ஒரு ப்ரஷ்ஷான கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளுங்...

தலைமுடி உதிர்வதற்கான காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும்...!

அடிக்கடி தண்ணீர் மாற்றி குளிப்பதினாலும் முடி உதிரலாம். தண்ணீரில் உள்ள உப்பின் காரணமாகவும் தலை முடி உதிரல் அதிகமாகலாம். உடலில் சரியான அளவு விட்டமின் இல்லாமையாலும் முடி உதிரலாம். தலை முடியை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் முடி உதிர்வத்தைத் தடுக்கலாம். தினமும் தலைக்கு குளித்து தலையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். தூக்கம் மனித உடலுக்கு மிகவும் அத்யாவசியமாகும். தூக்கம் குறையும் போது தலை முடி உதிர்கிறது. நாளொன்றுக்கு சராசரியாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். இதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம். சோம்பினை நன்கு அரைத்துக் கொண்டு தலையில் வாரம் மூன்று முறை தேய்த்து வர முடி கொட்டுவது தடுக்கப்படும். தலையின் உச்சந்தலையில் இருந்து தலைமுடி நுனி வரை சீப்பை வைத்து சீவ வேண்டும். இம்முறை தலையில் இரத்த ஓட்டம் சீராக பாய்வதற்கு உதவுகிறது. பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் கண்டிப்பாக முடி உதிர்வதற்கு ஆளாவார்கள். பொடுகை போக்குவதன் மூலம் முடி கொட்டுவதில் இருந்து தப்பிக்கலாம். முடி கொட்டுவதை தடுக்க வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எளிமையாக முடி கொட்டுவதை தடுக்கலாம். கறிவேப்பிலையை அதிகம் உணவில் எடுத்து க...

குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் நேந்திரப்பழ ஆப்பிள் சாலட்

srk2581 https://srk2581.blogspot.com இந்த சாலட் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. மேலும் இந்த சாலட்டில் பொட்டாசியம், மல்டிவிட்டமின்கள் நிறைந்துள்ளன. இன்று இந்த சாலட் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நேந்திரம் பழம் - 1  ஆப்பிள் - 1 தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன் பொடித்த நாட்டு சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் முந்திரி, பிஸ்தா, பாதாம் பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : வட்டமாக நேந்திரப் பழத்தை அறியவும். ஆப்பிளை தோல் நீக்கி சதுரமாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெட்டிய நேந்திரம் பழம், ஆப்பிள் துண்டுகளை போட்டு ஒன்றாக கலந்து அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து கலக்கவும். அடுத்து இந்த பழ சாலட்டில் பொடித்த நட்ஸ் தூவிக் கொள்ளவும். இறுதியாக, பொடித்த நாட்டுச் சர்க்கரை போட்டு லேசாகக் கிளறவும். 20 நிமிடங்கள் அப்படியே ஊறவிட்டால் நாட்டுச் சர்க்கரை கரைந்திருக்கும். இப்போது, இதை எடுத்து சாப்பிடலாம்.

அன்னாசிப்பழம்

✦ அதிக அளவில் அன்னாசிப்பழம் டப்பாக்களில் அடைத்து விற்கப்படுகிறது. இதனால் வருடம் முழுவதும் கிடைக்கும். அன்னாசிப்பழம் ஜாம், ஐஸ்கிரீம், பழரசம் செய்யப் பயன்படுகிறது. பழத்திலிருந்து சாராயம் தயாரிக்கப்படுகிறது. தவிர ஆல்கஹhலும் தயாரிக்கப்படுகிறது. ✦ சாறு எடுத்த பின் எஞ்சிய சக்கை கால்நடை தீவனமாக பயன்படும். சக்கையிலிருந்து பசை, எரிசாராயம், வினிகர் இவை தயாரிக்கப்படும். இலைகளிலிருந்து நு}ல் எடுக்கப்பட்டு நேர்த்தியான மெல்லிய பட்டு நெய்யப்படுகிறது. ✦ சமையலில் மணமும் சுவையும் ஏற்றும் கல்யாண சாப்பாடுகளில் பிரசித்தமானது பைன் - ஆப்பிள் ரசம். அன்னாசி அல்வா, கபாப், பல பழரசங்களுடன் சேர்த்த உற்சாக பானமாக செய்து உண்ணலாம். ✦ மாமிச உணவுகளை சமைக்கும் முன் அன்னாசி சாறு பிழிந்து அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் ஊறவிட்டால் மாமிசம் நன்றாக வேகும். சமைக்கும் நேரம் பாதியாக குறையும். ✦ மருத்துவ குணங்கள் அன்னாசியில் உள்ள புரோமலின் உணவின் செரிமானத்தை ஊக்குவிக்கும். என்ஸைசம் செரிமானம் குறைந்தவர்களுக்கு அன்னாசி மிகவும் நல்லது. ✦ மேலை நாடுகளில் மாமிச உணவுடன் சில துண்டுகள் அன்னாசி சாப்பிடுவது வழக்கம். மாம...

அழகுக் குறிப்புக்கள்.

பெண்கள் வீட்டில் சுலபமாகச் செய்து கொள்ளக்கூடிய அழகுக் குறிப்புக்கள். “எட்டில் அழகு பதினெட்டில் அழகு எந்தப்பெண்ணும் இருபதில் இரட்டை அழகு”அட பதினெட்டு என்ன பெண்கள் என்றால் எந்த வயதிலும் ஒரு அழகுதாங்க. பெண்களின் அழைகக் கவிபாடாத கவிஞர்கள் உண்டா? ஆனால் இன்றைய பெண்கள் வீட்டு வேலையுடன் வேலைக்கும் செல்லவேண்டி இருப்பதால் அவர்கள் தங்களின் அழகைப் பராமரிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகின்றனர்.அப்படி அவசரமாய் இயங்கிங்கொண்டிருக்கும் பெண்களுக்கு சுலபமாகச் செய்யக்கூடிய அழகுக் குறிப்புக்கள் இதோ.இரவு வேளையில் உறங்கச் செல்வதற்கு முன் முகம், கை மற்றும் கால்களை நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும். கை மற்றும் கால்களில் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசரைக் கொண்டு மசாஜ் செய்தால் மென்மையாகவும், நல்ல நிறமாகவும் இருக்கும்.பாலில் சிறிதளவு மஞ்சள் மற்றும் கடலை மாவைக் கலந்து குளித்து வந்தால் நல்ல நிறம் கிடைக்கும். உருளைக்கிழங்கின் சாறை முகத்தில் தடவினால், பிளீச்சிங் செய்த பலன் கிடைக்கும். பீட்ரூட்டை சிறு துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுத்து முகத்தில் தடவி 5 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள...

திருக்குறள்-23

திருக்குறள்

வல்லாரை கீரை

தோல் சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்தும் வல்லாரை கீரை மருந்துச்செடி வகைகளில் வல்லாரை முக்கிய இடம் வகிக்கின்றது. பிரம்பி, சரஸ்வதி, சண்டகி, யோசனவல்லி போன்ற தமிழ்ப்பெயர்களாலும் வல்லாரை பொதுவாக அழைக்கப்படுகின்றது. வல்லாரையில் இரும்புச்சத்து, சுன்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் தாது உப்புகள் நிறைந்து காணப்படுகின்றது. இது இரத்தத்திற்க்கு தேவையான அனைத்து சத்துக்களையும் சரிவிகித அளவில் கொண்டுள்ளது. தோல் வியாதி உள்ளவர்கள் வல்லாரை மிக சிறந்த மருந்து. இக்கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வர தோல் சம்பந்தமான வியாதி குறையும். வல்லாரை கீரையை பச்சையாக சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்படையும். மாலைக்கண் நோய் குணமாக வல்லாரை கீரையோடு பசும்பால் சேர்த்து உண்டு வர மாலைக்கண் நோய் மறையும். வல்லாரை ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது. வல்லாரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி பெருகும். புத்தி கூர்மையாகும். நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை சாப்பிடுவது நல்லது. இக்கீரை மலச் சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது. வல்லாரைக் கீரையை நன்கு சுத்தம் செய்து, சாதாரணமாகக் கீரைச் சாம்பார...

வெள்ளைச் சீனியும் அதன் நச்சுத் தன்மையும்

இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம். இந்த வெள்ளைச் சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயாணப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம். 1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள். 2. பிழிந்த சாறு 60 செண்டி கிரேட் முதல் 70 செண்டி கிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது. 3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள். 4. 102 செண்ட் கிரேட் கொதிகலன...

சப்போட்டா...

https://srk2581.blogspot.com சப்போட்டா... முடி கொட்டும் பிரச்சனையை சரிசெய்யும் சப்போட்டா....! சத்தான பழம் என்றுதான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும். 100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம். சப்போட்டா பழ சதையை எடுத்து அத்துடன் ரோஸ் வாட்டர், சிறிது சந்தன பவுடர் கலந்து கிரீமாக தயார் செய்து கொள்ளவும். இந்த கிரீமை முகம் முதல் கழுத்துவரை இட, வலமாக தடவ வேண்டும். காய்ந்த பின்னர் இளம் சூடான நீரில் ...

பப்பாளிப் பழத்தின் மருத்துவ பயன்கள்

✦ பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். ✦ பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். ✦ தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். ✦ பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். ✦ நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். ✦ பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும். ✦ பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும். ✦ பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும். ✦ பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும். ✦ பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும். ✦ பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும். ✦ பப்பாளி ...

திருக்குறள்-22

திருக்குறள்