Skip to main content

kutty story : பிறரை மகிழ வைத்து மகிழுங்கள்

வாழ்க்கைப் பற்றிய புதிர்கள் ஏராளம் உள்ளன. அதில் ஒன்று மகிழ்ச்சியைத் தேடி மனிதனின் நீண்ட போராட்டம். 

ஏழை, பணக்காரன், அதிகாரம் படைத்தவர், பாமரன், அறிவாளி என எத்தனை விதமானவர்களை  அழைத்து வந்தாலும் அவர்களுக்குள் எவ்வளவு வேறுபாடுகள் இருப்பினும் மகிழ்ச்சியை அவர்கள் தேடி அலைவது மட்டும் ஒரே பொதுக்காரணியாக இருந்து வருகிறது.

வாழ்க்கையின் அழகு என்பது நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதில் இல்லை.

உங்களால் அடுத்தவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதிலே தான் இருக்கிறது.

மகிழ்ச்சி என்பது போய் சேரும் இடம் அல்ல. அது ஒரு பயணம்...

மகிழ்ச்சி என்பது எதிர்காலம் இல்லை. அது நிகழ்காலம்...

மகிழ்ச்சி என்பது ஏற்றுக் கொள்வது அல்ல. அது ஒரு முடிவு...

ஒரு அழகான பெரிய பணக்காரப்பெண், அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண். ஒரு மனநோய் மருத்துவரை காணச் சென்றாள்.

அவரிடம் என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கிறது, எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணருகின்றேன். அர்த்தமே இல்லாமல், இலக்கே இல்லாமல் வாழ்க்கை போய்க் கொண்டு இருக்கிறது. என்னிடம் அளவு கடந்த பணமும், சொத்தும் இருக்கிறது. நினைத்தால் எதையும் எளிதில் செய்ய முடியும் அளவிற்கு வசதி வாய்ப்புகள் இருக்கிறது. இவ்வளவு இருந்தும் என்னிடம் இல்லாதது நிம்மதியும், மகிழ்ச்சியும் மட்டுமே. என் மகிழ்ச்சிக்கு ஏதாவது வழி சொல்லுங்கள் என்றாள்.

"மருத்துவர், சிரித்துக்கொண்டே கூறினார், நான் இப்பொழுது என் பணியாளரை இங்கு அழைக்கிறேன் அவரிடம் நான் பேசும்போது தாங்கள் உற்றுக் கவனியுங்கள் என்றார், அவரின் அலுவலகத்தில் தரையை கூட்டிக் கொண்டிருந்த அந்தப் பணிப்பெண்ணை அழைத்தார். 

அந்த பணக்காரப் பெண்ணிடம், " நான் இப்பொழுது பணிப்பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது என்று சொல்லச் சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் அவர் பேசுவதை மட்டும் கேளுங்கள் என்றார்.

பணிப்பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்லத் தொடங்கினாள்.. 

"என் கணவர் இறந்த மூன்றாவது மாதம் என் ஒரே மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்லை. யாரிடமும் சிரிக்க முடியவில்லை. என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன்.

ஒரு உயரமான இடத்தை நோக்கி நடந்தேன் அங்கிருந்து கீழே குதித்துவிடலாம் என்றென்னி, அப்போது நல்ல மழைப் பெய்தது மேற்கொண்டு நடக்க முடியாதபடி, சரி மழை விட்டப்பின் செல்லலாம் என்று ஒரு ஓரமாக நின்றுக் கொண்டிருந்தேன் அப்போது என் காலில் ஏதோ உரசுவது போல் தெரிந்தது என்னவென்று பார்த்தல் ஒரு பூனைக் குட்டி  குளிரில் நடுங்கியபடி நின்றுக்கொண்டிருந்தது, அதை நான் என் கையில் ஏந்தி அதை என் சேலை முந்தானையால் துடைத்தேன், அது என்னிடம் நன்றாக ஒட்டிக்கொண்டது. சற்று நேரத்தில் மழை விட்டபின் அதை இறக்கி கீழே விட்டுவிட்டு நான் என் முடிவுக்காக நடந்தேன். 

சற்று நேரம் என்னிடம் அடைக்கலம் அடைந்த பூனை என்னைப் பின் தொடர்ந்தது. வெளியே சில்லென்று காற்று இருந்தது , எனக்கு பூனையைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. நான் எவ்வளவோ விரட்டியும் அது என் பின்னால் வந்து கொண்டிருந்தது, அந்த ஒரு நிமிடம் நான் என் முடிவை தள்ளிப் போட்டேன், என் மனம் மாறியது பூனைக் குட்டியை கையில் ஏந்தி அதை நான் என் வீட்டில் உள்ளே வரச் செய்தேன். 

மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனைப் பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக் கொடுத்தது.

கடந்து போன மூன்று மாதத்தில் நான் முதல் முதலாகப் புன்னகைத்தேன்.

நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு செயல் என்னை மகிழ்ச்சி அடையச் செய்கிறது எனில், ஏன் இதைப் பலருக்கு செய்து நான் ஏன்  மனநிலையை மாற்றிக் கொள்ளக் கூடாது என யோசித்தேன்.

அடுத்த நாள் நோய் வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து நான் மகிழ்ந்தேன். 

இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி, அவர்தம் மகிழ, நானும் பெரு மகிழ்வு உற்றேன். இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா? என்பதே ஐய்ப்பாடு தான்.. 

மகிழ்ச்சி என்பது, நமக்கு கிடைப்பதை விட அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன் என்று கூறினார் அந்த பெண்மணி.

இதைக் கேட்ட அந்தப் பணக்காரப் பெண் ஓலமிட்டுக் கத்தி அழுதாள். அவளிடம் பணத்தைக் கொண்டு வாங்கக் கூடிய எல்லாம் இருந்தது. ஆனால் பணத்தால் வாங்க முடியாத மகிழ்ச்சி மட்டும்  அவளிடம் இல்லை.

நண்பர்களே..,

மரங்கள் கனிகளை தருவது போல, தங்களிடம் உள்ளதை  இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும்.

"பிறரை மகிழ வைத்து நாம் மகிழ வேண்டும்.

உலகம் உங்களைக் கண்டு மகிழும்"

உங்கள் வாழ்க்கை நிறைவாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

பனங்கிழங்கின் பயன்கள்!

✦ பனங்கிழங்கு குளிர்ச்சித் தன்மை உடையது. மலச் சிக்கலைத் தீர்க்கக் கூடியது. ✦ கிழங்கை மாவாக்கி அதோடு கருப்பட்டியும் சேர்த்து உருண்டை பிடித்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலு கிடைக்கும். ✦ கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மாவாக்கி சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் பருமனாகும். ✦ பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் வலுவடையும். ⚡பனங்கிழங்கு ..!!⚡  இப்போது பனம் கிழங்கு காலம் . எல்லோர் வீட்டிலும் எல்லா இடங்களிலும் பனம் கிழங்கை காணலாம் . பனம் கிழங்கை விரும்பாதோர் எவரும் இல்லை . எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் . ✦ மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது இந்த பனம் கிழங்கு . பனம் கிழங்கை அவித்து சும்மாவும் சாப்பிடலாம் . வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு துவைத்தும் உண்ணலாம் . கூடுதலாக பல்லு இல்லாதவர்கள் இப்படி உண்பார்கள் . ✦ பனம் பழங்கள் கிடைக்கும் காலங்களில் விதைகளைச் சேமித்து வைக்கும் மக்கள், உரிய காலத்தில் மண்ணைக் குவித்து மேடை போல அமைத்து, அதன்மேல் பனம் விதைகளைப் பரவி விடுவர். விதை முளைத்துக் கிழங்கு உருவானதும் அத...

IELTS READING SAMPLES FOR GENERAL TRAINING

IELTS READING SAMPLES FOR GENERAL TRAINING   ROBOTS AT WORK   A The newspaper production process has come a long way from the old days when the paper was written, edited, typeset and ultimately printed in one building with the journalists working on the upper floors and the printing presses going on the ground floor. These days the editor, subeditors and journalists who put the paper together are likely to find themselves in a totally different building or maybe even in a different city. This is the situation which now prevails in Sydney. The daily paper is compiled at the editorial headquarters, known as the prepress centre, in the heart of the city, but printed far away in the suburbs at the printing centre. Here human beings are in the minority as much of the work is done by automated machines controlled by computers. B Once the finished newspaper has been created for the next morning’s edition, all the pages are t...

வயிற்றை சுத்தம் செய்வது எப்படி?

kutty maruthuvam ஸ்ரீ கோரக்கர் சித்தர் எழுதிய "ரவிமேகலை" நூலில் இருந்து... புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை வாய்மையாற் காணப் படும்.. என்ற குறள் உடலின் தூய்மை மற்றும் மனதின் தூய்மை பற்றி வலியுறுத்துகிறது. இந்த அகத் தூய்மை மற்றும் புறத்தூய்மை தாண்டிய மூன்றாவது ஒரு தூய்மை குறித்து சித்தர் பெருமக்கள் பேசுகின்றனர். அதுவும் அகத் தூய்மைதான். நம் உடலின் உள்ளுறுப்புகளை பற்றியது அது. பிறந்த நிமிடம் முதல் இறுதி மூச்சுவரை ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உள்ளுறுப்புகளின் தூய்மை மற்றும் ஓய்வினை சித்தர் பெருமக்கள் உணர்ந்திருந்தனர். அதன் பொருட்டே சீரான இடைவெளிகளில் உபவாசம் எனும் உண்ணா நோன்பினையும், உள்ளுறுப்புகளை சுத்தி செய்யும் வகைகளையும் வரையறுத்துக் கூறியிருக்கின்றனர். அந்த வகையில் இன்று வயிற்றினை சுத்தம் செய்யும் முறை பற்றி பார்ப்போம். நம் உடலிற்குத் தேவையான சத்துகள் நாம் உண்ணும் உணவில் இருந்தே பெறுகிறோம். உணவில் இருந்து சத்துக்களை உடலுக்கு பிரித்தளிக்கும் வேலையை செய்வது நமது வயிறு. இதனை தூய்மையாய் வைத்திருந்தால் உடல் ஆரோக்கியத்தை ...