உங்கள் ஆசைகளை பட்டியளிடுங்கள் அவற்றை செயல் படுத்துவதில் தீவிரம்
காட்டுங்கள், எவ்வளவு தான் முயன்றும் முடியவில்லையே என்றால் உங்கள் திட்டமிடுதலில்
தவறு உள்ளது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். உங்களின் திட்டமிடுதலில் சிறு
மாற்றங்களை செய்து பாருங்கள். சின்ன யோசனை மாற்றம் தான் எவ்வாறு மாற்றம் வருகிறது
என்று பார்ப்போம்.
நண்பர் ஒருவர் புகைப் பழக்கத்துக்கு அடிமையாகி நிறுத்த வழியில்லாமல் அவதிப்
பட்டுக் கொண்டிருந்தார், அப்போது இன்னொரு நண்பரை அவர் தற்செயலாக சந்திக்க
நேர்ந்தது இருவரும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு புகைப் பிடிக்க போனார்கள் அப்போது இந்த
நண்பர் சிகரெட் இருகிறதா என்று கேட்டார் இல்லை நான் இப்போது பாக்கெட் வாங்குவது
இல்லை தேவைப் படும்போது ஒண்று வாங்கிக் கொள்வேன். ஏன் அப்படி என்று இந்த நண்பர்
கேட்டார், அதற்கு அந்த நண்பர் என்னிடம் பாக்கெட்இருந்தால் நான் தேவையில்லாதபோதும்
சிகரெட் பிடித்துக் கொண்டே இருக்கிறேன் ஆதாலால் இந்த மாதிரி ஒரு மாற்று வழியை
தேர்ந்தெடுத்தேன் அதன் பயன் நான் வெகுவாக குரைத்துவிட்டேன் முன்பெல்லாம் பாக்கெட்
கணக்கில் இருந்தது இப்போது விரல் எண்ணிக்கையில் வந்துவிட்டது. சில நேரங்களில்
நம்மிடம் இல்லையென்றால் வாங்குவதற்கு சோம்பல்பட்டு அப்புறம் பாத்துக்கலாம் என்று
தள்ளி போட்டு விடுவோம் இல்லையா என்று அந்த நண்பர் கூறினார். அதற்கு இந்த நண்பர்
அற்புதமான யோசனை நானும் இதையே கடைப் பிடிக்கிறேன், என்று இவரும் அதைக்
கடைப்பிடித்து இன்று பெருமளவில் புகைப்பதை நிறுத்திவிட்டார். சின்ன யோசனை பெரிய
மாற்றம்.
இன்னொரு சம்பவத்தையும் பார்ப்போம். இரண்டு நண்பர்கள் உடற்பயிற்சி செய்ய
ஜிம்முக்கு செல்வது வழக்கம் ஒருவன் மிகவும் நேர்த்தியாக எல்லாவற்றையும் செய்து
வந்தான் இன்னொருவனால் அவ்வளவாக செய்ய முடியவில்லை, இதை கவனித்த பயிற்சியாளர்
உனக்கு என்ன பிரச்சனை ஏன் முறையாக செய்யாமல் இப்படி அறையும் குறையுமாக செய்கிறாய்
என்று கடினமாக பேசினார், அதற்கு இல்லை மாஸ்டர் என்னால் முழுவதும் செய்ய
முடியவில்லை அதனால் எது எளிதாக இருக்கிறதோ அதை மட்டும் செய்கிறேன் என்றான். சரி
உனக்கு எந்த பயிற்சி கடினமாக இருக்கிறதோ அதை குறைவான எண்ணிக்கையில் செய்ய
வேண்டியது தானே, பிறகு நாளாக நாளாக அது உனக்கு முழுமையாக வந்து விடப் போகிறது,
பயிற்சியாளர் கூறினார் தம்பி முதலில் கடிணமான இலக்கை தீர்மானிக்க கூடாது உன்னுடைய
இலக்கை குறைத்துக்கொள் பிறகு உன்னை அறியாமலேயே நீ கூட்டி விடுவாய் என்று. இதை
கேட்டதும் ஆமாம் நாம் ஏன் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு இது நமக்கு எளிதானவுடன்
கூட்டிக்கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்து பின்னர் கடினமானதையும் செய்ய
ஆரம்பித்தான் இப்போது அவன் முறையாக எல்லாவற்றையும் செய்கிறான், ஒரு சின்ன மாற்று
யோசனை அது நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.
ஆம் இதைபோல நீங்களும் உங்களது குறிக்கோள்களை முறையாக திட்டமிடுங்கள், உங்கள்
மனது சுமையாக என்னாத அளவுக்கு அளவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சுமை இல்லையென்றால்
சுகம் தானே.
true one...
ReplyDelete