நமக்கு என்ன தேவை என்பதை வாழ்க்கை முதலில் தருவதில்லை மாறாக பலவிதமான கவலைகளையும் கடினமான வேலைகளையும் தான் தருகிறது, என்ன செய்வது நமது முயற்சி அனைத்தும் இந்த கடினமான சூழ்நிலைகளை கடந்து போவதற்கே போதுமானதாக இல்லை என்பதே உண்மை.
எதைத் தான் நாம் நேர்த்தியாக கையாள்வது என்பதை உணரவே பாதி வாழ்க்கை போதுமானதாக இல்லை, இதற்குள் எத்தனை அறிவுரைகள் இதை செய்யாதே அதை செய்யாதே என்று யார் யாரோ சொல்வதை கேட்கவேண்டும் ஏனென்றால் அவன் நம்மைவிட கொஞ்சம் நல்லா இருந்தால் அவன் அறிவுரையை நாம் கேட்டாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுகிறோம்.
எல்லாவற்றையும்விட கொடுமை இளமையில் வறுமை. ரொம்ப சந்தோசத்தையும் அனுபவிக்க முடியாம கஷ்டத்தையும் தாங்கிக்க முடியாம வாழ்றது இருக்கே அது இன்னும் பெரிய கொடுமை. இதுல யாரு இன்னும் அதிகமா பதிக்கப் படுராங்கானா கல்லூரி மாணவர்கள் தான். ஏனென்றால் வாழ்வின் உட்சபட்ச சந்தோசம் என்றால் அது கல்லூரி வாழ்க்கை தான்.
எவ்ளோ தான் நமக்கு வறுமை இருந்தாலும் கல்லூரியில நாம ராஜ இல்லேன்னா ராணி தான். அப்போதான் நம் உண்மையான முகம் அறியும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும். குடும்ப கஷ்டத்த உணர்ந்த மாதிரி ஆனாலும் நம்மோட சந்தோசம் குறையாம நாம் போடும் வேஷம் இருக்கிறதே அப்பப்பா ஒவ்வொருவரும் என்னமா நடிப்பாங்க. அனால் வாழ்க்கையோட சுவாரசியமே அதுல தாங்க இருக்கு இது எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு மேல வரவங்கதான் உண்மையான போராளி.
என் பார்வையில் இதில் அதிகம் பாதிக்கப் பவடுவது பெண்கள், கட்டுக்கோப்பான குடும்பத்தில் இருந்து எந்தவிதமான கெட்ட விசயங்களும் தெரியாத நல்ல பெண்கள் தான் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள், அதுவரை அம்மாவின் அரவணைப்பில் இருந்தவள் தோழியின் வற்புறுத்தலுக்கு இடம் கொடுக்கிறாள். அதுவரை பொய் சொல்லாமல் இருந்த பெண் முதல் முறையாக பொய் சொல்கிறாள் நாம் தவறு செய்கிறோம் என்பதை மனம் உணர்த்தியும் ஏனோ ஒருவித ஈர்ப்பாள் அதை உண்மைக்கு நிகராக கூறுகிறாள்.
எதுவுமே அறியாத தாயுள்ளம் அவளை முழுமையாக நம்பும். நம் பொண்ணுக்கு எதுவும் தெரியாது ஆதலால் அவள் சரியாக நடந்துக் கொள்வாள் என்பது அம்மாவின் கணக்கு, அதற்குள் அந்த பெண் வேற உலகத்துக்குள் நுழைந்திருப்பாள் அது நண்பர்களின் கூடாரமாக மாறி இருக்கும், ஆண் நண்பர்களின் அறிமுகம் அவளுக்கு புதுவிதமான உற்சாகஇதுவரை இல்லாத உணர்விது என்பது போன்ற பாடல் கேட்கும், இதிலும் விடுதியில் தங்கி படிக்கும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம். மிகவும் உற்சாகமாக செல்லும், விடுதியில் இருந்து வீட்டிற்கு வரும்போது உள்ள உற்சாகத்தின் அளவு குறைந்துகொண்டே போகும்.
தேவை இல்லாமல் கோவம் வரும் நண்பர்களின் உரையாடலை மனம் தேடும், பிரிந்து பல நாட்கள் ஆனது போல இருக்கும் அவர்களது உரையாடல், எப்போதும் கைப்பேசி கையிலேயே இருக்கும், ஏனோதானோ என்ற அளவில் இருக்கும் அவளது குடும்பத்துடனான உரையாடல். இதிலும் இன்னும் சில உத்திகள் கொண்ட பெண்கள் இருக்கிறார்கள் அது எவ்வாறு என்றால் என் பிரெண்ட் பேசுறான் அம்மா நீயும் பேசு என்று அம்மாகிட்டயே பேச சொல்வாள், கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அம்மாவும் பேசுவார்கள்.
அப்புறம் என்ன எப்போது கேட்டாலும், அம்மா அன்னைக்கு பேசுனிய அந்த பையன் தான்மா அப்டின்னு அழுத்தமா ஒரு பதில். அதையும் மீறி அம்மா கோவப்படுறமாதிரி தெரிஞ்சா அப்டியே கிட்டக்க வந்து கைய புடிச்சிக்கிட்டு என்னம்மா என்ன சந்தேகப் படுறியா, நான் எந்த தப்பும் செய்ய மாட்டம்மா என்ன நம்பு அப்டின்னு சொன்னா போதும் இந்த அம்மாக்கள் அதை அப்டியே நம்பிடுவாங்க அவ்ளோதான் அம்மாவின் கோவம் என்று சரியாக அளந்து வைத்திருப்பார்கள் பெண் பிள்ளைகள்.
இப்படி இவர்கள் செய்வது பெரிய தவறு இல்லையென்றாலும் நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்றாகத்தான் தோன்றுகிறது. இப்படி சொல்லும் அல்லது மறைக்கும் சின்ன சின்ன விசயங்கள் தான் பின்னாளில் பெரிய பாதிப்புகளை உண்டு பண்ணுகிறது. பெண்கள் நீங்கள் செய்யும் எல்லாமே தவறென்று சொல்லவில்லை, இது தான் தவறு என்று தெரியாமலே அதற்குள் விழுந்து விடுகிறீர்கள், உங்களிடம் பழகும் நண்பர்கள் சரியானவர்களா என்பதை எவ்வாறு உறுதி படுத்துவீர்கள் என்ற உத்தரவாதம் உங்களிடம் உள்ளதா? என்ற சுயபரிசோதனையை செய்து பாருங்கள்.
இன்றைய சூழ்நிலையில் தானாகவே சென்று ஏமாந்த பெண்கள் அதிகமாக இருப்பது வருத்தத்துக்குறிய செய்தி. வேண்டாம் இதுபோன்ற நிகழ்வுகள் இனியும், பெண் பிள்ளையாக இருந்தால் தாயிடம் சொல்லமுடியாத விசயங்கள் அனைத்தும் தவறென்றும் ஆண் பிள்ளைகளாக இருந்தால் தந்தையிடம் சொல்ல முடியாத அனைத்தும் தவறென்றும் புரிந்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுடைய ஆண் நண்பர்கள் அனைவரும் தவறானவர்கள் என்று சொல்லவில்லை, இன்றைய நாகரீக வளர்ச்சி என்று அவர்கள் செய்யும் செயல்கள் சில வரம்பு மீறி விபரீதத்தில் போய் முடிந்துவிடுவதே இதற்க்கான முக்கிய காரணமாகும்.
Comments
Post a Comment