1000 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் பேச்சாளார் ஒருவர் 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர். சிறிய புன்னகையுடன் மீண்டும் பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். ஆச்சரியமாக பார்த்தனர் அனைவரும்.
பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்று உரக்க கேட்டார். மீண்டும் ஆம் என்றவாறே அனைவரும் கையைத் தூக்கினர்.
மீண்டும் சிறிய புன்னகையுடன் அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி, “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார் அந்த பேச்சாளர் சற்று தயக்கத்துடன் அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.
அவர் தொடர்ந்தார் நண்பர்களே “கேவலம் ஒரு 500 ரூபாய் தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை.
ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போவது மட்டுமின்றி நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நாம் தான் சோர்ந்து போகிறோம் என்பதை முதலில் உணருங்கள், நீங்கள் தனித்துவமானவர் என்பதில் ஒருபோதும் ஐயம் கொள்ளாதிர்கள்.
இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. அதை நாம் உணராதவரை, அடுத்தவர் பார்வைக்கு நாம் எப்படி வேண்டுமானாலும் தெரியலாம் ஆனால் கண்டிப்பாக நம் பார்வையில் நாம் உயர்ந்தவராகவே தோன்ற வேண்டும்.
வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும். ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க
Nice story
ReplyDelete