மகிழ்ச்சியை தேடிக் கொண்டே இருந்தால். நிம்மதியைக் கூட இழந்து விடுவோம். வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்
கொள்ள கற்றுக் கொண்டால் மகிழ்ச்சி தானே தேடி வரும்.
யாரும் பாராட்டும் அளவுக்கு வாழவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை, நமக்கு திருப்தியா வாழ்ந்தாலே போதும். திருப்தியா
உங்களுக்கு புடிச்ச மாதிரி இருக்க பழகுங்கள்.
காலந்தாழ்த்தாமல் செய்கின்ற ஒவ்வொரு செயலும், நமக்கு மன நிறைவையும், வெற்றியையும் தேடித் தரும். எப்படி ஆரம்பித்தீர்கள் என்பது பற்றி யாரும் கண்டுக்க போறதே இல்ல. ஆனால் எப்படி முடிக்கிறீங்க
என்பதைத் தான் உற்று நோக்க ஒரு கூட்டம் உண்டு.
ஒருவன் ஏழையாயை பிறந்தது அவன் தவறு அல்ல ஆனால் அவன் ஏழையாகவே இறந்தால்
கண்டிப்பாக அது அவனுடைய தவறே. வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் மாதிரி.
நிறைய நிறுத்தங்கள். நிறைய வழித் தடம் மாற்றங்கள். விதம்விதமான மனிதர்களுடன் பயணங்கள்.
சில நேரம் விபத்துக்களும் கூட. அனைத்தையும் ரசித்துக் கொண்டே பயணிக்க கற்றுக் கொள்வோம்.
இது இயற்கையின் நியதி இதை புரிந்து கொண்டு
கிடைத்த வாழ்க்கையை அழகாய் ஆனந்தமாய் ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள்.
உங்களைப் பற்றி குறை சொல்பவர்களை நீங்கள் கண்டுக்கொள்ளாதிர்கள் ஏனெனில் நீங்கள்
என்ன செய்தாலும் அவர்கள் உங்களைப் பற்றி ஏதேனும் ஒன்றை சொல்லிக்கொண்டு தான்
இருப்பார்கள்.
என்னைப் பொறுத்தவரை உங்கள் வாழ்வில் இரண்டு கேள்விகளை உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள், "நல்லா வாழனுமா", "நல்லவனா வாழனுமா" என்ற இந்த இரண்டு கேள்விகள் தான் அவை. என்னுடைய
அபிமானம் இந்த இரண்டு கேள்விகளைப் பற்றியது என்னவென்றால் உங்களுடைய தேர்வு நல்லவனா
வாழ வேண்டும் என்றால் நீங்கள் காலம் முழுவதும் நடித்துக் கொண்டே தான் இருக்க
வேண்டும். நீங்கள் நீங்களாவே இருக்க முடியாமல் ஒரு வகையான போலித்தனமான வாழ்க்கையை
வாழ்வீர்கள். அதே நல்லா வாழனும் என்பதை தேர்ந்து எடுத்தால் உங்கள் மனம்போன
வாழ்கையாக உங்களுக்கு பிடித்தாற்போல் நல்லவனாக வாழ முடியும்.
யாருக்கும் நாம் நல்லவர் என்பதை புரிய வைக்கவேண்டிய அவசியம் இல்லை மாறாக
நம்முடைய வாழ்க்கை முறை அதனை அவர்களுக்கு காட்ட வேண்டும் என்பது என்னுடைய கருத்தாக
நான் இங்கே பதிய வைக்கிறேன். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்பதை புரிந்துக்
கொண்டாலே போதும். வாழ்வில் மகிழ்ச்சி
எப்போதும் நம்மை சூழ்ந்துகொள்ளும்.
மகிழ்ச்சி என்பது அடுத்தவர் நம்மை எப்படி பார்க்கிறர்கள்
என்பதைவிட நாம் நம்மை எப்படி பார்க்கிறோம் என்பதில் இருக்கிறது ஆதலால் முடிந்தவரை
நம்மை நாமே பார்த்துக்கொள்வோம் மகிழ்ச்சியாக இருப்போம். உங்களைப் பற்றி சிறப்பான
முறையில் சிந்திக்க உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை என்பதை புரிந்துக்
கொள்ளுங்கள்.
Nice bro
ReplyDelete