நாம் கேட்ட உதவி கிடைக்கவில்லை என்றால், மறுத்தவரை உடனடியாக தவறுதலாக புரிந்துக் கொண்டு வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி விடுகிறோம், அவ்வாறு நடந்துகொள்வது உண்மையில் தவறு. நம் மீது உள்ள அக்கறையாகக் கூட அவர்கள் மறுத்து இருக்கலாம். இதற்க்கான உதாரண கதையை பார்ப்பபோம்.
ஒரு ஆற்றங்கரையில் இரண்டு பெரிய மரம் இருந்தது. அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி,
மரத்திடம் கேட்டது. மழை காலம் தொடங்க இருப்பதால்,
நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க
முடியுமா? என்றது. முதலில் இருந்த
மரம் முடியாது என்றது. அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது.
குருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம். அன்று பலத்த மழை ஆற்றில்
வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது. தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி
சிரித்து கொண்டே சொன்னது, எனக்கு வசிக்க கூடு
கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய் என்றது.
அதற்கு மரம் கூறிய
பதில் எனக்கு தெரியும் நான் வழுவிழந்து விட்டேன். எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க
மாட்டேன். தண்ணீரில் அடித்து செல்லபடுவேன் என்று. நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை
வாழ வேண்டும் என்று தான் உனக்கு இடம் இல்லை என்றேன். மன்னித்து விடு என்றது.
அந்த குருவிபோல் தான் நம்மில் நிறையபேர் இருக்கிறோம், இது குறிப்பாக வெளி நாடுகளில் வேலை பார்பவர்கள் மீது அதிகமாக காண்பிக்கப் படுகிறது. இரண்டு நண்பர்களில் ஒருவன் வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருகிறான் தினமும் நண்பனுடன் தொடர்பு கொண்டு நான் இங்கு நல்லா இருக்கன் வாழ்கை ரொம்ப சிறப்பா போகுதுன்னு சொல்ல சொல்ல இவனுக்கும் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை வருகிறது.
சில மாதங்களில் அவன் வேலைப் பார்க்கும் கம்பெனியில் இவனுக்கும் வேலை கிடைக்கிறது இந்த செய்தியை வெளிநாட்டில் வேலை செய்யும் நண்பனிடம் சொல்லும்போது அவன் மறுக்கிறான் வேண்டாம் உனக்கு இந்த கம்பெனி வேண்டாம், வேறு எதவாது அல்லது வேறு நாட்டிற்காவது முயற்சி செய் என்று. காலத்தின் போக்கை யாரால் வெல்ல முடியும். அவன் சொல்லும்போது சரி என்று சொல்லிவிட்டு அதே கம்பெனிக்கு வேலைக்கு வருகிறான் இந்த நண்பன். இங்கு வந்த பின்பு தான் தெரிகிறது அவன் செய்தது எவ்வளவு பெரிய தவறென்று.
மறுத்த நண்பனை பார்க்கும்போது உணர்ந்துகொண்டான் அந்த குருவி எண்ணியது போலத் தான் இவன் தன் நண்பனை என்னியிருக்கிறான். நண்பா நான் பட்ட கஷ்டம் உனக்கு வேண்டாம் என்று தான் நான் உன்னை தடுத்தேன் என்னிடம் சொல்லாமலே வந்துவிட்டாயே என்று. இதே போலத் தான் வெளி நாட்டிற்கு சென்று ஏமாறுபவர்கள் அங்கு வேலை பார்ப்பவர்களின் பேச்சை கேட்க்காமல் தனக்குத் தானே முடிவு எடுப்பது தான்.
உங்களை யாரும் நிராகரித்தால்
தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்.
தீர விசாரித்த பின்னரே முடிவெடுங்கள்.
Comments
Post a Comment