kutty story நமக்கு என்ன தேவை என்பதை வாழ்க்கை முதலில் தருவதில்லை மாறாக பலவிதமான கவலைகளையும் கடினமான வேலைகளையும் தான் தருகிறது, என்ன செய்வது நமது முயற்சி அனைத்தும் இந்த கடினமான சூழ்நிலைகளை கடந்து போவதற்கே போதுமானதாக இல்லை என்பதே உண்மை. எதைத் தான் நாம் நேர்த்தியாக கையாள்வது என்பதை உணரவே பாதி வாழ்க்கை போதுமானதாக இல்லை, இதற்குள் எத்தனை அறிவுரைகள் இதை செய்யாதே அதை செய்யாதே என்று யார் யாரோ சொல்வதை கேட்கவேண்டும் ஏனென்றால் அவன் நம்மைவிட கொஞ்சம் நல்லா இருந்தால் அவன் அறிவுரையை நாம் கேட்டாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுகிறோம். எல்லாவற்றையும்விட கொடுமை இளமையில் வறுமை. ரொம்ப சந்தோசத்தையும் அனுபவிக்க முடியாம கஷ்டத்தையும் தாங்கிக்க முடியாம வாழ்றது இருக்கே அது இன்னும் பெரிய கொடுமை. இதுல யாரு இன்னும் அதிகமா பதிக்கப் படுராங்கானா கல்லூரி மாணவர்கள் தான். ஏனென்றால் வாழ்வின் உட்சபட்ச சந்தோசம் என்றால் அது கல்லூரி வாழ்க்கை தான். எவ்ளோ தான் நமக்கு வறுமை இருந்தாலும் கல்லூரியில நாம ராஜ இல்லேன்னா ராணி தான். அப்போதான் நம் உண்மையான முகம் அறியும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும். குடும்ப கஷ்டத்த ...