மொச்சைக் கொட்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
மொச்சைக் கொட்டை பார்த்தாலே கடிக்கும் அளவிற்கு வசீகரமாக இருக்கும். அதிலுருக்கும் விதைதான் ருசியே. இது பீன்ஸ் வகையை சார்ந்தது. மிக அதிக புரோட்டின் உள்ள காய்தான் மொச்சைக் கொட்டை. மிக அதிக மருத்துவ குணங்களும் பெற்றுள்ளது. சாப்பிடுவதற்கும் ருசியை தரும். இதனை அவித்து சாப்பிடுவது நல்லது. இது வாய்வு தொல்லையை தரும். ஆனால் அதனை சமைக்கும்போது பெருங்காயம் இஞ்சி பூண்டு போன்றவற்றை கலந்து சமைத்தால் வாயுத் தொல்லை வராது. அதனை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளை காண்போம்.
கர்ப்பிணிகளுக்கு நன்மை : -
கர்ப்பிணிகளுக்கு கால்சியம் மற்றும் இரும்பு சத்து மிக முக்கியம், இந்த இரண்டும் பரிந்துரைக்கபட்ட அளவு மொச்சையில் உள்ளது என்பது மகிழ்ச்சியான விஷயம்.
பார்கின்ஸன் நோய் :-
மொச்சையில் லெவோடோபா என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த பொருளைத்தான் பார்கின்ஸன் நோய் இருப்பவர்களுக்கு மருந்தாக மாத்திரைகளில் உபயோகப்படுகிறது.
மன அழுத்தம் :-
மொச்சையிலுள்ள அமினோ அமிலம் டோபமைன் நல்ல மன நிலையை அதிகரிக்கச் செய்கிறது. மன அழுத்தத்தை தடுக்கும்.
Comments
Post a Comment