குதிகால் வெடிப்பு மறைய என்ன செய்யலாம்?
கால்களில் ஏற்படும் பித்தவெடிப்பானது காலப்போக்கில் கிருமித் தொற்றுக்கு உள்ளாகி பல்வேறு நோய்களை ஏற்படுத்த கூடும். எனவே பாதத்தில் வெடிப்பு ஏற்பட்டதும் உடனடியாக மாற்றிவிட வேண்டும்.
எனவே குறித்த பித்தவெப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன?
சிலருக்கு கடினமான செருப்பு அணிவதாலும், சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினாலும், கால் வெடிப்பு ஏற்படுவதுண்டு. அதே போன்று தோலினால் ஆன காலணியை அணிபவர்களுக்கு காலில் வெடிப்பு வருவதில்லை. காலில் வரும் வியர்வையை காலணி உள்வாங்கிக்கொள்ளும். தோல் உலரும்போது ஈரப்பதமுள்ள காலணி நமக்கு பாதுகாப்பாக அமையும்.
அதிக எடை உள்ளவர்கள், வறண்ட சருமத்தினர், அதிகமாக அழுக்கான இடங்களில் நடப்பவர்கள், தோட்ட வேலை செய்பவர்களுக்கு காலில் வெடிப்பு வர வாய்ப்புகள் அதிகம். எனவே தவிர்க்க முடியாத நமது வாழ்வியல் முறமையினால் எப்படியோ பித்தவெடிப்பு ஏற்பட்டுவிட்டால் அதை போக்குவதற்கான சில வழிமுறைகள் உள்ளன.
ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், ஒன்றரை டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை உங்கள் குதிக்காலால் தூங்க செல்ல முன் தேய்த்து கொள்ள வேண்டும். சாக்ஸ் அல்லது ப்ளாஸ்டிக் பையினை இருகால்களிலும் அணிந்து கொள்ள வேண்டும்.
இரண்டு டேபிள் ஸ்பூன் ஒலிவ் எண்ணெயை எடுத்து சூடுபடுத்தி கொள்ளுங்கள். அது போதுமான அளவில் சூடாக இருக்கும்போது, அதனைகொண்டு உங்கள் கால்களை ஊற வையுங்கள். அந்த எண்ணெயை அதிகம் கொதிக்க வைத்துவிட கூடாது என்பதை கவனத்தில் கொண்டு, வெப்ப நிலையை பரிசோதித்து, அதன் பின்னர் தான் உங்கள் கால்களை அதில் ஊற வைக்க வேண்டும். இந்த சிகிச்சை முறையை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு பழுத்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் பால் க்ரீமை சேர்த்து நன்றாக கலந்துகொண்டு ஒரு வாரத்துக்கு பயன்படுத்தி வர குதிக்கால் வெடிப்பு மறையும்.
Comments
Post a Comment