ஒரு ராஜாவுக்கு இரண்டு பஞ்சவர்ண கிளிக் குஞ்சுகள் வெகுமதியாக வந்தன. ராஜா அந்த ரெண்டையும் பறக்க வைத்து பேசப் பயிற்சி கொடுக்கச் சொன்னாரு. அதுல ஒரு கிளி நல்லா பறந்து வார்த்தைகளும் கத்துக்க ஆரம்பிச்சது.
ஆனா இன்னொரு கிளி பறக்க கூடத் தெரியாம ஒரு கிளையில உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே இருந்தது. ராஜா பெரிய அமைச்சர்கள், ஆலோசகர்கள் எல்லோரையும் விட்டு பயிற்சி கொடுக்க வச்சும் கிளி பறக்கல. இதைக் கேள்விப்பட்டு ஒரு வயசான விவசாயக் குடிமகன் வந்து "நான் பறக்க வைக்கிறேன்"னு சொன்னார்.
அடுத்த நாள் காலை ராஜா கண் விழிக்கும்போது, பறக்காத அந்த பஞ்சவர்ணக்கிளி மரத்தைச் சுற்றி அங்கும் இங்கும் பறந்து சுற்றுவதைப் பார்த்தார். அவருக்கு ஒரே சந்தோஷம். "இந்த அற்புதத்தை எப்படி செய்தீங்க?"ன்னு கேட்க, அதுக்கு அந்த விவசாயி பணிவோட, "அது ரொம்ப சுலபமான காரியம் அரசே! மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டி விட்டேன்.கீழே விழப்போகிறோம் என்று தெரிந்ததும் கிளி தட்டுத்தடுமாறி பறக்க பழகிவிட்டது,என்றார்...
இப்படித்தான் நாமும் பல சமயங்கள்ல நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் நின்றுக்கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே, அதுதான் நம்மால் முடியும் என்று செய்கிறோம். ஆனால் நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை சாதிக்க முடியாதவை என்று எதுவும் இல்லை என்பது நமக்கு புரியும்.
அந்தக் கிளியைப் போலத் தான் இன்று பலர் அவர்களுடைய திறமையை குறைத்து மதிப்பிட்டு அவர்கள் அதே இடத்தில் நின்று விடுகிறார்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் வீட்டு வேலை மட்டும் தான் நமக்கானது என்று அவர்கள் முடிவெடுத்து அதை மட்டுமமே அவர்கள் வாழ்க்கை முழுவதும் பார்ப்பவர்கள் நிறையபேர். மாணவர்களும் அப்படி தான் இருக்கிறார்கள் மற்ற மாணவனால் எடுக்கப்படும் மதிபெண்ணாக இருக்கட்டும் அல்லது விளையாட்டுப்போட்டி வெற்றியாக இருக்கட்டும் இதெல்லாம் நம்மால முடியாது என்று விலகி விடுகிறார்கள்.
இதில் என்ன கொடுமையான விசயம் என்றால் பெற்றோர்களும் இதை ஆதரிக்கிறார்கள். மாறாக பெற்றோர்கள் ஊக்குவித்தால் குறைந்தபட்சம் அவர்கள் முயற்சித்து பார்ப்பார்கள், முயற்சி பண்ணாமல் இருப்பதே பெரிய தோல்வி. அதேமாதிரி உன்னால அது முடியாது அது உனக்கு வேண்டாம்னு சொல்ற பெற்றோர்களும் இன்றைக்கு நிறைய உண்டு. உதாரணமாக நீ குட்டையா இருக்க உன்னால பெரிய வண்டி ஓட்ட முடியாது, கூடைப் பந்து விளையாட முடியாது, தனியா போய் எதுவும் வாங்க தெரியாது இப்டி நிறைய விசயத்துல அவர்களை மட்டம் தட்டுவதே பெற்றோர்கள் தான்.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுங்க நல்ல விசயங்களை சொல்லி கொடுங்க தைரியத்த சொல்லி கொடுங்க, பெண் பிள்ளைகளுக்கு good touch bad touch சொல்லிக் கொடுங்க இதெல்லாம் செய்யாம என் பொண்ண பொத்தி பொத்தி வளத்தன் இப்டி பண்ணிட்டாலே அப்டின்னு பின்னாடி வருத்த படாமல் இருக்கலாம். இன்றைய காலக் கட்டத்தில் அம்மாக்கள் செய்ய வேண்டிய முக்கியமான பொறுப்புகளில் ஒன்று பெண் பிள்ளைகளுக்கு good touch bad touch சொல்லிக் கொடுப்பது. அதைப் பற்றி பேசவே கூச்சப் படும் அம்மாக்கள் அதிகம் என்பது வேதனையான விசயம்.
வாழ்க்கைப் பாதையில் நடந்து பாருங்கள் எட்டிவிடும் தூரத்தில்தான் வெற்றி என்ற ஊருக்கு செல்லும் வழி இருக்கிறது... நன்றாக வாழுங்கள் மாற்று சிந்தனையோடு
Comments
Post a Comment