மாவட்ட அளவிலான ஒட்டப்பந்தயம்
நடைபெற்றுக் கொண்டிருந்தது. கடந்த ஒரு மாதமாக தீவிர பயிற்சி எடுத்து களத்தில்
ஒடுவதற்கு தயாராக இருந்தான் தனிஷ். எப்படியாவது முதல் பரிசு வெல்ல வேண்டும் என்ற எண்ணம்
தான் அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்துது. விசில் ஊதப்பட்ட சத்தம்
கேட்டவுடன் ஓடத் தொடங்கினான். அவனது கால்கள் குதிரையைப் போல பறந்தன. எல்லாரையும்
முந்தி ஓடி வந்து முதல் இடத்தை பிடித்தான். பரிசு வாங்கிய கைகயோடு வீட்டிற்கு
சென்றான்.
வயலில் உழுது கொண்டிருந்த அப்பாவை நோக்கி சென்று
பரிசைக் கொடுத்தான். அவனது அப்பா மிகுந்த மகிழ்ச்சியோடு உனது விடாமுயற்சிக்கும், தொடர்
பயிற்சிக்கும் கிடைத்த வெற்றி என்று பாராட்டினார். சில மாதங்கள் கடந்தன.
பொங்கல் தினத்தன்று தனிஷின் ஊரில் பல விலாயாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. ஓட்டப்பந்தயத்தில் தனிஷ் கலந்துக் கொண்டான். எல்லோரும் தனிஷ் தான் வெல்வான் என்று கருதினார்கள் ஊரார் முன்னிலையில் ஓடத் தொடங்கினான். ஆனால் பழைய வேகமில்லை. கால்களில் ஏதோ வலி
தெரிந்தது. பரிசு பெறவே போராட வேண்டியிருந்தது. இறுதியாக மூன்றாம் பரிசு பெற்றான்.
தன்னால் முதல் பரிசு பெற முடியவில்லையே என்று வருத்ததோடு அப்பாவிடம் சொன்னான்.
அப்பா தனிஷின் தோள்களில் கை
வைத்து ‘இந்த ஏர்கலப்பையை பார்த்தயா,
இதை ஒரு வாரம் தான்
பயன்படத்தவில்லை. அதற்குள் துருப்பிடித்து விட்டது. இதுபோல தான் உன்னிடம் திறமையும், ஆற்றலும்
இருந்தது. ஆனால் தொடர்ந்து பயிற்சி இல்லை. அதனால் தான் உன்னால் பழைய வேகத்தில் ஓட
முடியலப்பா” என்றார் அப்பா வெற்றி பெற உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் நாமும் துருப்பிடித்துப் போய்விடுவோம்” என்பது தனிஷுக்கு புரிந்தது.
இன்று நாமும் இதுபோலத்தான் கடுமையான பயிற்சியின் மூலம் வெற்றிப் பெற்று விடுகிறோம் ஆனால் வெற்றி வந்துவுடன் நாம் முறையான பயிற்சியையும், முயற்சியையும் கைவிட்டு விடுகிறோம். அதனால் தான் பல நேரங்களில் தோல்வியை தழுவ நேரிடுகிறது. நாம் எப்போதும் தொடர்ந்து வெற்றிப் பெற விரும்பினால் தொடர் பயிற்சியையும் தொடர் முயற்சியையும் என்றும் தொடர வேண்டும். இல்லையென்றால் நாமும் துருப்பிடித்து போய்விடுவோம்.
Comments
Post a Comment