ஒரு காட்டில் எறும்புகள் கூட்டம் கூட்டமாக
வாழந்து வந்தன. அதில் ஒரு செவ்வெறும்பும் கட்டெறும்பும் நண்பர்களாக இருந்தன. ஒரு நாள் இருவரும் இரைத் தேடி அலைந்து கொண்டிருந்தனர். எங்கேயும் உணவு
கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு குளத்தின் கரையில் இருந்த மாமரத்தைப் பார்த்தன. அதில்
நிறைய மாம்பழங்கள் பழுத்து தொங்கி கொண்டிருந்தன.
இரண்டு எறும்புகளும் பசியாக இருந்ததால் மாமரத்தில் ஏறி ஒரு மாம்பழத்தின் மீது
அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன. திடீரென்று ஒரு பெருங்காற்று வீச அந்த மாம்பழம்
குளத்தில் விழுந்தது. இரண்டு எறும்புகளும் தண்ணீரில் தத்தழிக்க ஆரம்பித்தன. நண்பா இப்படி வந்து தண்ணீரில்
விழந்துவிட்டோமே. இப்ப என்ன பண்றது என்றது செவ்வெறும்பு.
நிச்சயம், எதாவது உதவி கிடைக்கும். அது வரை
நீந்திக்கிட்டே இருப்போம் என்றது கட்டெறும்பு. நேரமாகி கொண்டே இருந்தது. எந்த உதவியும்
கிடைக்கவில்லை. இரண்டு எறும்புகளும் நீந்தி நீந்தி சோர்ந்து போயின. நண்பா இவ்வளவு நேரம் நீந்தியதில் கை, கால்கலெல்லாம் சக்தியில்லாம போய்விட்டது.
இதற்கு மேல் என்னால் நீந்த முடியாது. தண்ணீரில மூழ்கி இறக்கத்தான் போகிறேன் என்றது
செவ்வெறும்பு.
இல்லை இல்லை அப்படி சொல்லாதே. இன்னும் கொஞ்ச
நேரம் போராடு நிச்சயம் எதாவது உதவி கிடைக்கும் என்றது கட்டெறும்பு. இனி எந்த உதவியும் கிடைக்க போவதில்லை. நாம்
சாக தான் போகிறோம் என்று தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது செவ்வெறும்பு. எதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
போரடிக் கொண்டே இருந்தது கட்டெறும்பு. அந்த வழியே போன எறும்பு கூட்டம், இந்த குளத்துல வந்து மாட்டிக்கிட்டியா. இந்த
குளத்துல விழுந்த யாருமே பிழச்சது இல்ல என்று சொல்ல திடுக்கிட்டது கட்டெறும்பு.
இந்த குளத்துல இருந்து நாம எங்க தப்பிக்க
போறோம் என்று தன்
மேல் இருந்த நம்பிக்கையை இழந்த கட்டெறும்பு, சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி உயிரை
விட்டது. மேல் உலகம்
சென்ற கட்டெறும்பு கடவுளை பார்த்து, கடவுளே என் உயிர ஏன் இவ்வளவு சீக்கிரமா
எடுத்துக்கிட்டீங்க.? என்றது கட்டெறும்பு . அதற்கு கடவுள் நான் உன்னை சாகடிக்கவில்லை நீயே தான்
இறந்துவிட்டாய் என்று கடவுள்
கூறினார்.
என்ன சொல்லுறீங்க... என்று திடுக்கிட்டது
கட்டெறும்பு...
நீ குளத்தில் விழுந்த போது அடுத்தவங்க
சொன்னாங்க என்பதுக்காக உன் மேல உனக்கு இருந்த நம்பிக்கையை இழந்து, போரடும் என்னத்தை விட்டுட்டு தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டாய். ஆனால் நீ மட்டும் அன்றைக்கு இன்னும்
கொஞ்ச நேரம் போராடியிருந்தால் நிச்சயம் எதாவது ஒரு வகையில உதவி செய்து நான் உன்னை
காப்பாற்றி இருப்பேன், என்று கடவுள்
கூறினார்.
கடைசியாக ஒன்று
சொல்கிறேன் நன்றாக கேட்டுக்கொள், உன்மீது நம்பிக்கை உள்ளவரை நீ உயிருடன் இருந்தாய் என்பதை மறந்துவிட்டாய், எப்போது அடுத்தவர் வார்த்தையைக் கேட்டு
உன்மீது உள்ள உன்னுடைய நம்பிக்கையை இழந்தாயோ அப்போது தான் நீ உன்னுடைய உயிரை இழக்க
நேர்ந்தது என்பதை உணர்ந்துக்கொள் என்று கடவுள் கூற கண்ணீர் பெருகியது
கட்டெறும்பின் கண்களில்.
ஆம் இன்று நாமும் இதுபோலத் தான் யாராவது
நம்மைப் பற்றி குறைவாக சொல்லிவிட்டால் அதைப் பிடித்துக் கொண்டு அதன் பின்னால்
சொல்கிறோமே தவிர நாம் என்றுமே நம்மை கடைசிவரை முழுமையாக நம்பியது இல்லை, நம்மில் நிறையபேர் சொல்வது நான் நம்பிக்கையோடு தான் இருந்தேன் அனால் அது
எனக்கு நிறைவேரயில்லைஎன்று தான் அதன் உண்மை அந்த நம்பிக்கையின் பலம் உறுதியாக
இல்லை என்பது தான். நம்மீது நமக்கே நம்பிக்கை இல்லாத பொழுது நாம் கடவுளின்
பார்வையில் இருந்து விலகிச் செல்கிறோம் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்.
யார் என்னவேண்டுமானாலும் சொல்லட்டும்
உங்களுடைய நம்பிக்கையை எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் கடைசிவரை போராடுங்கள்
ஏனெனில் உங்களின் இறுதிவரையான போராட்டத்தில் தான் இறைவன் இருக்கிறான், இதை எல்லாம் தெரிந்துக் கொண்டு ஏன் என்னை
இறைவன் சோதிக்கவேண்டும் என்ற கேள்வி இருந்தால் அதை அந்த இறைவனிடமே கேளுங்கள்
உங்களுக்கு தரமான ஒரு பதிலை கண்டிப்பாக இறைவன் வைத்திருப்பார் என்பது என்னுடைய
அசைக்கமுடியாத நம்பிக்கை.
Comments
Post a Comment