kutty story வாழ்க்கை வாழ்வதற்கே வீழ்வதற்கு அல்ல... தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர் , தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர் , தனது தொழிலில் ஒரு பத்து பேர் , தனது வீதியில் ஒரு பத்து பேர் , தனது ஜாதியில் ஒரு அறுபது பேர் , இந்த நூறு பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும் , பாசமாக , நட்பாக , அன்பாக , வீரனாக , நல்லவனாக காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த கேடுகெட்ட சமுதாயம் மனிதர்களுக்கு போதிக்கிறது. எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டு பார்த்து அதைவிட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் மதிப்பு என்று போலியான வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்துகிறது. அவன் அப்படி , இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்யச் சொல்கிறது. பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்ததும் பிறரை ஏளனமாக , கேவலமாக நினைக்கச் சொல்கிறது. இந்த நூறு பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும் , கோபமும் , கௌரவமும் மட்டுமே ஒருவனை பாதிக்கின்றன. இதற்காக தன்னுடைய அத்தனை ஆசாபாசங்களையும் அடக்கி வைத்து , மனித ஜடமாக வாழும் பலருக்கு இந்த பூமிப் பந்து எழுநூறு கோடி மக்களால் ஆன...