kutty story வாழ்க்கைன்னா லட்சியம், குறிக்கோள் வேணும், இப்படிச் சொல்வதில் உண்மை இருந்தாலும் நமது லட்சியம் எப்படி இருக்க வேண்டும் என்பது பலருக்கும் பிடிப்படாத ஒன்றாகவே உள்ளது. லட்சியம் வைப்பது என்றால் ஏதோ ஒன்றைப் பற்றி வெறுமனே கனவு காண்பதோ,ஏதோ ஒன்றுக்காக ஆசைப்படுவதோ அல்ல. உண்மையான இலட்சியம், திட்டமிடுவது, அதை அடைய கடினமாக வேலை செய்வது ஆகியவை உட்படுகின்றன. நாம் அடைய வேண்டிய எல்லையும், நாம் கடக்க வேண்டிய இடைவெளியும் தெரியாவிட்டால் நாம் குறிப்பிட்ட இலட்சியத்தை அடைய முடியாது. நாம் ஒரு இலட்சியத்தை வைக்க வேண்டும், உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதை அடைய நாம் திட்டங்கள் தீட்டி வழி முறைகளை உருவாக்கிக் காலத்தைக் கணக்கிட்டுச் செயலில் இறங்க வேண்டும். உங்கள் இலட்சியத்தை இன்றே முடிவு செய்யுங்கள். கடந்து போன காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். காலம் கடந்து போனது போனது தான், இனி திரும்ப வரப்போவது இல்லை. இனி இருக்கின்ற காலத்தையாவது சரியாகப் பயன்படுத்துவோம். இலட்சியத்தை முடிவு செய்வதை சாதாரணமாக நினைக்காதீர்கள். இலட்சியம் உங்கள் வாழ்க்கைப் பிரச்சனையை போக்கும் ஒரு குறியீடு. ...