உயரிய இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை அடைவதற்கு முறையான திட்ட்ங்களை வகுத்து, சரியானவர்களின் வழிகாட்டுதல்களோடு, அர்ப் பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறவர்கள் மாபெரும் வெற்றியாளனாவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க இயலாது.
எனவே, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமெனில் உங்களுக்கென்று சில இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஏதேனும் அடைய வேண்டும் என்று நம் மனம் விருப்பப்படுவதற்குப் பெயர் இலக்கு அல்ல, அதற்கு பெயர் ஆசை.
ஆசை வேறு, இலக்கு வேறு. இரண்டையும் ஒன்றுக்கொன்று குழப்பி விடக் கூடாது. ஆசை என்பது ஒன்றை விரும்புவதைத் தாண்டி எதுவும் இல்லை என்பது. இலக்கானது விருப்பப்படுவதோடு நின்று விடுவது இல்லை, அதனை அடைவதற்கான தீவிர முயற்சியை நோக்கி நம்மை உந்தித் தள்ளுவது.
வாழ்க்கையில் எதை அடைய வேண்டுமென்று நாம் எடுக்கும் திடமான முடிவுக்குப் பெயர்தான் இலக்காகும்". இலக்கில்லா வாழ்க்கை. உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது போல இலட்சியங்கள் இல்லாத வாழ்க்கையும் உப்பில்லாத பண்டம் போலத்தான் இருக்கும்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியின்மைக்கும்,சலிப்புக்கும் முக்கிய காரணமே சரியான இலக்குகள் இல்லாமலிருப்பது தான். எனவே நாம் செய்கின்ற வேலையையோ அல்லது படிக்கின்ற படிப்பையோ தீராத ஆர்வத்தோடும், பெரும் ஈடுபாட்டுடனும் செய்வதற்கு தெளிவான இலக்குகள் அமைத்துக் கொள்வது அவசியமாகும்.
ஜான் F கென்னடி அமெரிக்க அதிபராக இருந்த சமயம், அவர் மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களில் ஒருவனிடம், “உன்னுடைய இலக்கு என்ன?” என்று கேட்டார்.
“இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் ஒருநாள் நான் இருக்க வேண்டும் என்பதே எனது இலக்கு” என பதிலளித்த அந்த மாணவன்தான் பின்னாளில் அமெரிக்க அதிபரான பில் கிளிண்டன். அந்த சிறு வயதில் கிளிண்டன் தனது மனதில்
நிர்ணயித்திருந்த அந்த மாபெரும் இலக்குதான் அவரை அவரது இலக்கு நோக்கி பயணிக்கச் செய்தது.
இன்னும் 5 ஆண்டுகள் (அ) 10 ஆண்டுகளுக்கு பின்னர் நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை இன்றே தீர்மானிக்க வேண்டியது அவசியம். இப்போது எங்கே இருக்கிறோம்? எந்த நிலையை அடைய விரும்புகிறோம்? என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து, “இது தான் எனது இலக்கு” என்று ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
இன்றே உங்கள் இலக்கை நிர்ணயுங்கள். அந்த இலக்கை அடைவதற்கு திட்டமிடும்போதே அதனை அடைவதற்கான காலக் கெடுவையும் நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
Comments
Post a Comment