Skip to main content

அடுத்த நூறு அடிக்கான வெளிச்சம் வந்து விடும்

அது ஒரு பெரிய மைதானம். அங்கே மூன்று பையன்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அந்த வழியாகச் சென்ற ஒரு சாமியார் அவர்களைக் கவனித்தார். குழந்தைகள் உற்சாகமாகச் சிரித்து விளையாடுவதைச் சிறிது நேரம் ரசித்தார். அதன்பிறகு அவர் மெல்லமாகக் கைதட்டி அவர்களை அழைத்தார்.

பையன்கள் சாமியாரை மேலும் கீழும் பார்த்தார்கள். அவருடைய விநோதமான உடை அலங்காரமும் ஜடாமுடியும் அவர்களுக்குச் சிரிப்பு மூட்டியது. சாமியார் அவர்களைக் கேட்டார். ‘கண்ணுங்களா, நீங்க எப்பவும் இந்த மைதானத்திலதான் விளையாடுவீங்களா,....‘ஆமா சாமி!’

‘எதுக்காக தினமும் விளையாடறீங்க? அதனால உங்களுக்கு என்ன பலன்?’

முதல் பையன் சொன்னான். ‘நல்லா விளையாடினா உடம்பு பலமாகும். அதுக்கப்புறம் நாம யாரையும் பார்த்துப் பயப்படவேண்டியதில்லை எதிர்த்து வர்றவங்களையெல்லாம் ஊதித் தள்ளிவிடலாம் என்றான். இந்த பதிலைக் கேட்டுச் சாமியாருக்கு மிகவும் மகிழ்ச்சி.‘நீ பெரிய பயில்வானா வருவே’ என்று அவனை ஆசிர்வதித்தார்.

அதன்பிறகு இரண்டாவது பையனின் பக்கம் திரும்பினார். ‘நீ ஏன்ப்பா தினமும் விளையாடறே? ஜாலியா விளையாடினாதான் மனசுக்கு ரிலாக்ஸா இருக்கும். அதுக்கப்புறம் முகத்தைக் கழுவிகிட்டு உட்கார்ந்து படிச்சா எல்லாம் சட்டுன்னு புத்தியில ஏறும்! பிரமாதம். நீ பெரிய படிப்பாளியா வருவே என்று இரண்டாவது பையனை ஆசிர்வதித்தார் சாமியார்.

பிறகு மூன்றாவது பையனையும் அதே கேள்வியைக் கேட்டார். ‘நீ ஏன்ப்பா தினமும் விளையாடறே? அவன் சுருக்கமாகப் பதில் சொன்னான். ‘எனக்கு விளையாடப் பிடிக்கும். அதான் விளையாடறேன்!’ சாமியார் அவனை வணங்கினார். ‘இனிமே நீதான் என்னோட குரு!’

ஒவ்வொன்றுக்கும் காரணம், பின்விளைவுகள், லாப நஷ்டங்களையெல்லாம் யோசித்துக் குழம்பிக் கொண்டிருக்காமல் அந்தக் கணத்தைச் சொட்டு மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள்.

இப்போ என்னா செய்கிறீர்களோ அதை மட்டும் சிந்தியுங்கள் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆராய்ச்சியெல்லாம் செய்யாமல் இருங்கள். நடக்கபோவது நன்றாகவே நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும், அதற்க்கான பயம் வேண்டாம். 

இரவு நேரத்தில் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பயணம் செய்யும் வாகணங்களின் வெளிச்சம் இருக்கும் இடத்தில்இருந்து சுமார் நூறு அடி வரை தான் தெரியும் ஆனால் அந்த வாகனங்கள்  பல நூறு மைல்கள் உள்ள தூரத்தை சென்று அடைகிறது அது எப்படி? ஆம் நீங்கள் நினைத்தது சரி தான் முதலில் தெரியும் நூறடி வெளிச்சத்தை வைத்து அந்த தூரத்தை கடந்தபின் அடுத்த நூறு அடிக்கான வெளிச்சம் வந்து விடும். வாழ்க்கையும் அதுபோல தான் போக போக அதற்கான வழியையும் அது அமைத்து தரும். 

Comments

Popular posts from this blog

பனங்கிழங்கின் பயன்கள்!

✦ பனங்கிழங்கு குளிர்ச்சித் தன்மை உடையது. மலச் சிக்கலைத் தீர்க்கக் கூடியது. ✦ கிழங்கை மாவாக்கி அதோடு கருப்பட்டியும் சேர்த்து உருண்டை பிடித்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலு கிடைக்கும். ✦ கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மாவாக்கி சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் பருமனாகும். ✦ பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் வலுவடையும். ⚡பனங்கிழங்கு ..!!⚡  இப்போது பனம் கிழங்கு காலம் . எல்லோர் வீட்டிலும் எல்லா இடங்களிலும் பனம் கிழங்கை காணலாம் . பனம் கிழங்கை விரும்பாதோர் எவரும் இல்லை . எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் . ✦ மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது இந்த பனம் கிழங்கு . பனம் கிழங்கை அவித்து சும்மாவும் சாப்பிடலாம் . வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு துவைத்தும் உண்ணலாம் . கூடுதலாக பல்லு இல்லாதவர்கள் இப்படி உண்பார்கள் . ✦ பனம் பழங்கள் கிடைக்கும் காலங்களில் விதைகளைச் சேமித்து வைக்கும் மக்கள், உரிய காலத்தில் மண்ணைக் குவித்து மேடை போல அமைத்து, அதன்மேல் பனம் விதைகளைப் பரவி விடுவர். விதை முளைத்துக் கிழங்கு உருவானதும் அத...

IELTS READING SAMPLES FOR GENERAL TRAINING

IELTS READING SAMPLES FOR GENERAL TRAINING   ROBOTS AT WORK   A The newspaper production process has come a long way from the old days when the paper was written, edited, typeset and ultimately printed in one building with the journalists working on the upper floors and the printing presses going on the ground floor. These days the editor, subeditors and journalists who put the paper together are likely to find themselves in a totally different building or maybe even in a different city. This is the situation which now prevails in Sydney. The daily paper is compiled at the editorial headquarters, known as the prepress centre, in the heart of the city, but printed far away in the suburbs at the printing centre. Here human beings are in the minority as much of the work is done by automated machines controlled by computers. B Once the finished newspaper has been created for the next morning’s edition, all the pages are t...

வயிற்றை சுத்தம் செய்வது எப்படி?

kutty maruthuvam ஸ்ரீ கோரக்கர் சித்தர் எழுதிய "ரவிமேகலை" நூலில் இருந்து... புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை வாய்மையாற் காணப் படும்.. என்ற குறள் உடலின் தூய்மை மற்றும் மனதின் தூய்மை பற்றி வலியுறுத்துகிறது. இந்த அகத் தூய்மை மற்றும் புறத்தூய்மை தாண்டிய மூன்றாவது ஒரு தூய்மை குறித்து சித்தர் பெருமக்கள் பேசுகின்றனர். அதுவும் அகத் தூய்மைதான். நம் உடலின் உள்ளுறுப்புகளை பற்றியது அது. பிறந்த நிமிடம் முதல் இறுதி மூச்சுவரை ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உள்ளுறுப்புகளின் தூய்மை மற்றும் ஓய்வினை சித்தர் பெருமக்கள் உணர்ந்திருந்தனர். அதன் பொருட்டே சீரான இடைவெளிகளில் உபவாசம் எனும் உண்ணா நோன்பினையும், உள்ளுறுப்புகளை சுத்தி செய்யும் வகைகளையும் வரையறுத்துக் கூறியிருக்கின்றனர். அந்த வகையில் இன்று வயிற்றினை சுத்தம் செய்யும் முறை பற்றி பார்ப்போம். நம் உடலிற்குத் தேவையான சத்துகள் நாம் உண்ணும் உணவில் இருந்தே பெறுகிறோம். உணவில் இருந்து சத்துக்களை உடலுக்கு பிரித்தளிக்கும் வேலையை செய்வது நமது வயிறு. இதனை தூய்மையாய் வைத்திருந்தால் உடல் ஆரோக்கியத்தை ...