வாழ்க்கையை படியுங்கள்
பென்சில் : என்னை மன்னிக்க வேண்டும்.
ரப்பர்: எதற்காக மன்னிப்பு?
பென்சில்: நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?
ரப்பர்: நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்காக படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன். அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே.
எனக்குத் தெரியும், நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன். அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும்.
இதுதான் வாழ்க்கை ..
நம்மில் சிலர், பலருக்கு ரப்பராக இருக்கிறோம், வெளியே தெரியாமல்
. அருமையான ஒரு வாழ்க்கை தத்துவ விளக்கம்.
இதை படித்தவுடன் மனதில் உதித்தது
இந்த கதை யில் ஒரு முக்கயமான கேரக்டர் மறைக்கப்பட்டுள்ளது. ஆம். பென்சில் தவறாக எழுதியதிற்கு வருந்துவதும் ரப்பர் தவறுகளை அழித்து அழிவதாகவும் கருத்து சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பென்சிலின் தவறுகளையும் ரப்பரின் திருத்தல்களையும் தாங்கி நிற்கும் ஒரு கேரக்டர் தான் காகிதம். இது பென்சிலின் கிறுக்கலையும் ரப்பரின் திருத்தலையும் பொருத்துக்கொள்ளும். அழுத்தமும் உரசலும் அதிகமாக கிழிவது காகிதம் மட்டுமே. இப்ப கருத்து பென்சில் போல சிலர் தவறு செய்கின்றனர், ரப்பர் போல சிலர் தவறுகளை திருத்த முயற்சி செய்கின்றனர், ஆனால் காகிதம் போல சிலர் இருவராலும் சேதமடைந்து கிழிபவர்களும் உண்டு. இதில் பிறர் தவறை தாங்கியும் திருத்தலை தாங்கியும் நிற்கும் காகிதமாக வாழ்வது சிலர்....

Comments
Post a Comment