kutty story இந்த உலகத்தில் நாம் பிறக்கும்போது அழுதுகொண்டே பிறக்கின்றோம். உங்களை சுற்றி உள்ள அனைவரும் மகிழ்ச்சியில் சிரித்தார்கள். ஆனால் இறக்கும் போது அமைதியாக இருந்து போகின்றோம். அந்த சமயம் மற்றவர்கள் சிரிக்க கூடாது. அழ வேண்டும். அப்போதுதான் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டு. தனக்கு என்ன தேவை இருக்கிறது என்பதை கேட்டுப் பெற்றுக் கொள்பவன், அந்த நிமிடம் மற்றவர்கள் கண்களுக்கு, முட்டாளாக தெரியலாம். ஆனால், தனக்கு என்ன வேண்டும் என்று கேட்க்காதவன் அவனுடைய வாழ்நாள் முழுவதுமே முட்டாளாக வாழ்கின்றான். தினம் தினம் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுடைய ஆசிரியர் தான். உங்களுக்கு அவர் குருதான். ஏனென்றால் ஏதாவது ஒரு பாடத்தை, அவர் உங்களுக்கு கற்றுத் தந்து விட்டு சென்றிருப்பார். அவர்களை கட்டாயம் மதிக்க வேண்டியது உங்களுடைய கடமை. உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயத்தில் கவனத்தை செலுத்துங்கள். பிடிக்காத விஷயத்தில், கட்டாயத்திற்காக ஒரு நிமிடத்தை கூட வீணாக்காதீர்கள். ஏனென்றால் அது உங்க...