1 கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட், ஆன்டிபயாடிக் நிறைந்துள்ளன. கால்சியம், சோடியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ், ஜின்க், ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, சி, இ உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.
2 செல் வளர்ச்சிக்கு உதவிபுரிகிறது. காயம், தழும்பு, வலிகள் குணமாகின்றன. இதில் உள்ள சதைப்பகுதியை உட்கொள்வதால், அல்சர், புற்றுநோய், தொற்று நோய்கள், கீமோதெரப்பியின் பக்கவிளைவுகள் கட்டுப்படும்.
3 கற்றாழைச் சாற்றைத் தினமும் காலையில் ஒரு கிளாஸ் மோருடன் கலந்து உட்கொண்டுவந்தால், கர்ப்பப்பை நோய்கள் வராமல் தடுக்கலாம், பிரச்னையும் குணமாகும்.
4 வயிற்றில் நல்ல பாக்டீரியாவை உருவாக்கி, செரிமான செயல்பாட்டைச் சீராக்கும். இர்ரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் என்கிற உணவு உண்டதும் மலம் கழிக்கும் உணர்வு ஏற்படும் பிரச்னை தீரும்.
5 மூட்டு வீக்கம், மூட்டு இறுகுதல், மூட்டு பலவீனம் குணமாகும். வலி குறையும்.
6 ஆசிட் ரிஃப்லெக்ஸ் என்று சொல்லக்கூடிய உணவுக்குழாயில் அமிலம் வெளியேறி, உணவுக்குழாயில் புண் ஏற்படும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவைக்க கற்றாழைச் சாறு உதவுகிறது. நெஞ்சு எரிச்சல் குறையும். வயிற்றுப் புண்கள் வராமல் தடுக்கும். சிறந்த மலமிலக்கியாகச் செயல்படும்.
7 நல்ல கொழுப்பை உடலில் சேர உதவும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்.
8 இதில் உள்ள வைட்டமின் சி, சளி, இருமல், மூக்கு அடைப்பு, சுவாசக் கோளாறுகளை நீக்கும்.
9 சருமம், முகத்தில் இதன் சாற்றைப் பூசிவர தழும்புகள், கரும்புள்ளிகள், பருக்கள் இன்றி சீரான, அழகான சருமம் கிடைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.
10 சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்கவைத்து, இறந்த செல்களை நீக்கும். சருமச் சுருக்கங்கள், சருமத்தில் ஏற்படும் வரிகள், திட்டுக்கள் சரியாகும். பிரசவத்துக்குப் பின் ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்கை நீக்கும்.
11 வாரம் ஒரு முறை கூந்தலில் தடவிவர, கூந்தல் மென்மையாகும். பளபளப்புடன் காணப்படும். உடல் குளிர்ச்சி அடையும்.
12 அதிகப்படியான நீரை வெளியேற்றி சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும்.
குறிப்பு :-
சோற்று கற்றாலை
2 or 3 ஆண்டுகள் வளர்ந்த கற்றாழைச் செடிகளின் இலைகள் முற்றியதாக இருக்கும். அவற்றில்தான் அத்தனை சத்துகளும் பொதிந்திருக்கும். அவற்றை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும். கற்றாழைச் செடியின் வெளிப்புறமாக வளரும் மடல்கள் முதிர்ச்சி அடைந்திருக்கும். அவற்றை நறுக்கி எடுத்து, அதிலுள்ள மஞ்சள் நிறப் பாலை முழுமையாக வடிக்க வேண்டும். பிறகு அதன் தோலை அகற்றிவிட்டு, உள்ளே இருக்கும் வழவழப்பான ஜெல்லை எடுத்து, 6 , 7 முறை நீரில் நன்கு கழுவ வேண்டும். கழுவும்போதுதான் அதிலுள்ள அலோனின் என்ற வேதிப்பொருள் நீங்கும். இல்லாவிட்டால் அது வயிற்றின் உள்ளே செல்லும்போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று எரிச்சல் உண்டாகும். நன்கு கழுவினால்தான், கற்றாழையின் கசப்புச் சுவை மற்றும் நாற்றமும் விலகும்.
1. காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அப்போது சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது நல்லது.
2. காலை வெறும் வயிற்றில் குடிக்கும்போது சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிப்பது நல்லது.
3. கற்றாழைச் சாற்றுடன் பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்துக் குடித்தால் எந்த மருத்துவத்துக்கும் அசராத வறட்டு இருமல் நம்மை விட்டு வேகமாக விலகும்.
4. நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துக் குடித்தால் மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
5. மோர் சேர்த்துக் குடித்தால் உடல் சூடு தணியும். இது வெயில் காலத்தின் அமுது. வெயிலால் தோலுக்கு உண்டாகும் ஒவ்வாமை மற்றும் முகத்தில் வரக்கூடிய கருந்திட்டுகள் நீங்கும்.
6. கற்றாழையுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சிச் சாறு சேர்த்துக் குடித்தால் மலச்சிக்கல் நீங்கும். உடலில் உள்ள கொழுப்பு கரையும், பித்தமும் குறையும்.
7. பசுந்தயிரை மோராக்கி அதனுடன் சிறிது உப்பு, பெருங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்துக் கற்றாழை ஜெல்லை கலந்து மிக்ஸியில் அடித்துக் குடிக்கலாம்.
இதில் எந்த வகையில் தயார் செய்து குடித்தாலும், அதைத் தயாரித்த அரை மணி நேரத்துக்குள் ஃப்ரெஷ்ஷாகக் குடித்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு மேல் தாமதப்படுத்திக் குடித்தால், பலன் தராது. மேலும், கற்றாழை ஜூஸ் குடித்த ஒரு மணி நேரம் வரை வேறு எந்த உணவும் உண்ணாமல் இருப்பது நல்லது. கற்றாழை ஜூஸை காலை நேரங்களில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்ல பலன் தரும்.
இந்த ஜெல்லை முகத்தில் மற்றும் தேவையான சறும பகுதியில் தேய்த்து வைத்து இருந்து பிறகு லேசான வெண்ணீரில் கழுவி விடலாம். இதனால் சறுமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இளமையாகவும் இருக்கும். இதற்கு காரணம் விட்டமின் E, A இதில் அதிகம் உள்ளது
இதில் உள்ள விட்டமின் C ... >சளி ,இருமல் போன்றவற்றை நமக்கு வராமல் தடுக்கிறது .
Comments
Post a Comment