வாரத்திற்கு எத்தனை முறை சிக்கன் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா?
சிக்கன் பற்றிய சந்தேகம் சிக்கன் அதிகம் சாப்பிடுவது ஆபத்து என்பது சந்தேகத்தையும் தாண்டி நம்பிக்கையாகவே மாறிவிட்டது. ஆனால் இது முற்றிலுமாக உண்மையல்ல. ஏனெனில் எந்த முறையில் சமைக்கிறோம் என்பதை பொறுத்துதான் அதன் விளைவுகள் கணிக்கப்படும். சிக்கனை பொறுத்த வரை அதிலிருந்து அதிக ஊட்டச்சத்துக்களை பெற அதை க்ரில் அல்லது ரோஸ்ட் முறையில் செய்து சாப்பிட வேண்டும்.
ஊட்டச்சத்துக்கள் ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி 100 கிராம் சிக்கனில் 124 கலோரிகளும், 20 கிராம் புரோட்டினும், 3 கிராம் கொழுப்பும் உள்ளது. போதுமான அளவு கலோரிகளும், புரோட்டினும் இருப்பதால்தான் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிக்கன் சிறந்த உணவாக பரிந்துரைக்கப்படுகிறது
எவ்வளவு சாப்பிடலாம்? சிக்கன் சாப்பிடும் அளவானது அவரவர் உடலமைப்பை பொறுத்து மாறுபடுவதாகும். ஒருவேளை நீங்கள் ஒரு சாதாரண ஆளாக இருந்து உங்களின் உடல் எடை 65 முதல் 75 கிலோக்குள் இருந்தால் நீங்கள் தினமும் 200 கிராம் சிக்கனை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
மனஅழுத்தத்தை போக்கும் உணவு எவ்வளவு மனஅழுத்தத்தில் இருந்தாலும் சிக்கனை பார்த்து விட்டால் அவை அனைத்தும் காணாமல் போய்விடும். சிக்கன் உங்களுக்குள் இருக்கும் மனஇறுக்கத்தை போக்கி மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு உணவாகும். அதற்கு காரணம் அதிலிருக்கும் டிரிப்டோபன் என்னும் அமினோ அமிலம் ஆகும். மேலும் இது உங்கள் மூளையில் மகிழ்ச்சிக்கான ஹார்மோனான செரோடோனின் அளவை அதிகரிப்பதால் உங்கள் மனநிலையை எளிதில் மாற்றிவிடும்
தினமும் சாப்பிடலாமா? அளவிற்கு அதிகமாக எதை சாப்பிட்டாலும் ஆபத்துதான். இது சிக்கனுக்கு பொருந்தும். தினமும் சிக்கன் சாப்பிடுவது தவறல்ல, ஆனால் சாப்பிடும் அளவில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். சிலருக்கு சிக்கன் சாப்பிடுவது அலர்ஜியை ஏற்படுத்தும் அவர்கள் சிக்கன் சாப்பிடாமல் இருப்பதே நல்லது. வாரத்திற்கு மூன்று முறை தாராளமாக சிக்கன் சாப்பிடலாம்.
Comments
Post a Comment