உனக்காக வாழ் உனக்காக வாழ்
உன்னால் பிறரும் பயன்பட வாழ் !!!!
உதவியை நாடு
உன்னை நாடி வரும் உதவியை ஏற்காதே
பின்னாளில் சொல்லிக்காட்டியே வஞ்சம் தீர்த்திடுவார் !!!!
பிறரின் முகவரி தேடாதே
உனக்கென ஒன்றை உண்டாக்கி கொள் !!!!!
தீயவருடன் பழகு
தீயதை கற்காதே
நல்லதை சொல்லிக்கொடு !!!!
முயற்சியை காதலி
ஒருமுறை தோற்றாலும்
மீண்டும் முயற்சிக்க சொல்லும்!
காதலை முயற்சி செய்
ஒருமுறை தவறு செய்தால்
மறுமுறை சரி செய்ய தோன்றும் !!!!
நேசிக்கும் அன்பை விட்டு விடாதே
விட்டுசென்ற அன்பை மீண்டும் நேசிக்காதே !!!!
உலகம் உன்னுடையதுதான்
அது உன்னுடையது என்று நீ நினைத்தால் !!!
கல்லறையும் ஒரு கருவறைதான்
அதில் இருப்பவர் உன் சொந்தமென்றால் !!!
தெரியாததை கற்றுக்கொள்
தெரிந்ததை இன்னும் தெரிந்துக்கொள்
வாழ்க்கை உன் வசமாகும்
தன்னம்பிக்கையுடன் உழைப்பிருந்தால் .....!!
Comments
Post a Comment