சூரியனை பார்த்தால் சூப்பர் சக்தி கிடைக்கும்’-நாசா தகவல்..!
அதிகாலையில் சூரியனின் கதிர்களை வெறும் கண்ணால் பார்த்து வணங்குவது இந்தியாவில் பண்டைய வழிபாட்டு முறைகளில் ஒன்றாக இருக்கிறது.
இந்தியாவில் யோகக் கலைகளில் ஒன்றாக பார்க்கப்படும் சூரியவை பார்க்கும் வழக்கமானது, பண்டைய மாயன் நாகரீகம், எகிப்து, திபெத் ஆகிய நாடுகளில் பல்வேறு பெயர்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சூரியனை பார்த்தால் டெலிபதி போன்ற ‘Super Human Abilities’ எனப்படும் சிறப்பு சக்திகள் கிடைக்கும் என்றும் உணவு உண்ணாமல் கூட வாழலாம் எனவும் நாசா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
பொதுவாக சூரியனை பார்த்தால் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும் என இந்தியாவில் நம்பப்பட்டு வருகிறது.
எனவேதான் சூரியனை பார்த்து வணங்குவது, முக்கியமான வழிபாட்டு முறையாக இந்தியாவில் அறியப்படுகிறது. ஆனால் சூரியனை வெறும் கண்ணால் பார்ப்பதன் மூலம் நாம் எதிர்பார்க்காத சக்திகளை பெற முடியும் என ஆச்சரியப்படுத்தியுள்ளது நாசா.
சூரியனை பார்ப்பது என்பது சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் குறைவாக இருக்கும் அதிகாலை நேரத்தில் சூரியனை பார்ப்பதாகும்.
இந்த செயல்முறையின் போது நாம் வெறும்காலுடன் இருத்தல் அவசியம்.
பூமிக்கும் சூரியனுக்குமான ஒரு இணைப்புப் பாலமாக நாம் செயல்பட வேண்டும். இதனை தொடர்ச்சியாக, சரியான முறையில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு உணவுத் தேவை என்பது மிகக்குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
தன்னை ’சூரியக்கதிர்களை உண்பவன்’ என அழைத்துக் கொள்ளும் இந்தியாவைச் சேர்ந்த ”ஹிரா ரத்தன் மானக்” என்பவர் தன்னை ஆராய்ச்சி செய்யுமாறு நாசா விஞ்ஞானிகளை அணுகினார்.
நாசாவினால் நிதியுதவி பெறக்கூடிய பென்சில்வேனியா மருத்துவர்கள் குழு அவரை ஆராய்ச்சி செய்த போது, பல ஆச்சரியத்தக்க தகவல்கள் கிடைத்தன. சூரிய ஒளி மூலம் கிடைக்கும் சிறப்பு சக்தியால் அவர் உணவு உண்பதே இல்லை என மருத்துவர்கள் அறிந்தனர்.
100 நாட்களுக்கு அவரை தங்கள் கண்காணிப்பில் வைத்திருந்த மருத்துவர்கள், ஹிரா ரத்தன் மானக்கினால் சூரிய ஒளியை ஆற்றலாக எடுத்துக் கொண்டு உயிர்வாழ முடிகிறது எனவும் இந்த காலகட்டத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் மோர் மட்டுமே அவர் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
முதல் மூன்று மாத காலத்திற்கு சூரியனை பார்க்கும் போது சூரியனின் ஆற்றலானது கண்கள் வழியாக சென்று ’ஹைபோதாலமஸ் பாதை ’என்ற அங்கத்தில் தனது சக்தியை சேர்க்கிறது.
கண்களில் உள்ள ரெட்டினாவுக்கும் மூளைக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பாதையே ’ஹைபோதாலமஸ் ’ என அழைக்கப்படுகிறது.
இதன் பின்னர் இந்த பாதை வழியாக சூரிய ஆற்றலானது மூளையை அடைகிறது. அதன் பின்னர் மன அழுத்தம், பசி ஆகியவை சிறிது, சிறிதாக குறையத் தொடங்குமாம்.
மேலும் மனிதனிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள், கெட்ட பழக்க வழக்கங்கள் மறைந்து போகுமாம்.
சூரியனை பார்த்தல் செயல்முறையை செய்யத் தொடங்கிய 3 மாதங்களிலிருந்து 6 மாதத்திற்குள், உடல் உள்ள நோய்கள் மறைந்து போகுமாம்.
இதற்கு காரணம் சூரியனிலிருந்து வெளிப்படும் வண்ணங்கள், நம் உடலில் உள்ள பல்வேறு பாகங்களில் ஏற்பட்டுள்ள நோய்களை குணப்படுத்துவதுதான்.
வண்ண மருத்துவம் எனப்படும் துறையைச் சேர்ந்த மருத்துவர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கல்லீரல் நோய்களுக்கு பச்சை நிறமும், இதயத்திற்கு மஞ்சள், சிறுநீரகத்திற்கு சிவப்பு ஆகிய வண்ணங்கள் குணமளிக்கின்றனவாம்.
இப்படி வானவில்லில் இருக்கக் கூடிய அனைத்து வண்ணங்களும் சூரிய ஒளி வழியாக நம் உடலில் புகுந்து நோய்களை போக்குகிறதாம்.
வண்ண மருத்துவம் என்ற கோட்பாட்டின் கீழ் தான் பல வண்ணங்களில் இருக்கக் கூடிய சரிவிகித உணவை எடுத்துக் கொண்டால் நோய்கள் அண்டாது என கூறப்படுகிறதாம்.
சூரியனை பார்த்தல் செயல்பாட்டின் நிபுணர்கள், உடலுக்கு தேவை உணவு இல்லை எனவும் அதிலிருந்து கிடைக்கும் ஆற்றல்தான் உடலை இயக்க தேவை எனவும் கூறுகின்றனர்.
அந்த ஆற்றலானது சூரிய ஒளி மூலமே கிடைத்துவிடுவதால், உணவு தேவைப்படுவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் சூரியக்கதிர்களை நேரடியாக பார்ப்பது கண்களில் உள்ள ரெட்டினாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கண் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் சரியான நேரத்தில், சரியான வழிமுறையில் சூரியனை பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
சூரியனை பார்ப்பதை பல ஆண்டுகளாக செய்து வருபவர்களின் கண்களை சோதித்த போது, அவர்களின் கண்களில் எந்த பாதிப்பும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
Comments
Post a Comment