நெட்டைப் புடலங்காயை நாம் ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன் படுத்தி வருகிறோம்...
இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன் படுத்த வேண்டும். நெட்டைப் புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் இடைவெளி விட்டு ஒரு மண்டலம் சாப்பிட்டு வர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்து விடும்.
எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் நெட்டை புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
இதய கோளாறு உள்ளவர்கள் நெட்டைப் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டிவீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் அனைத்தும் நீங்கும்.
நெட்டைப் புடலையின் வேரை கைப்பிடி எடுத்து மைய அரைத்து சில துளிஅளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.
நெட்டைப் புடலங்காயை கூட்டு, பொறியல் அடிக்கடி செய்து சாப்பிட நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள் நெட்டை புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்து வர அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்.
கடும் காய்ச்சல் உள்ளவர்கள் வெட்டிய நெட்டைப் புடலங்காய் 250 கிராம் எடுத்து 300 மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 200 மிலி குடித்தால் ஒரே நாளில் காய்ச்சல் இயற்கையாகவே நீங்கும்.
Comments
Post a Comment