Skip to main content

Posts

Showing posts from 2018

புத்தாண்டு வாழ்த்துகள்

https://srk2581.blogspot.com உனக்குள் ஒளிந்து கிடக்கும் திறமைப் பெட்டகத்தை வெளிக் கொணர். உனக்குள் முடங்கிக் கிடக்கும் அறிவொளிச் சிறகை ஆனந்தமாய் விரித்து பற. உனது அக விளக்கு உலக அகல் விளக்கு. அதைக் கொண்டு இருளை விலக்கு. வெற்றிப் பூ விரைவாய் விரிவாய்ப் பூக்கட்டும். உன் விரலசைவில் விடியல் விடியட்டும். வாழ்க பல்லாண்டு வளர்க புகழ் நீண்டு வாழ்த்துகள் புத்தாண்டு.

kutty thathuvam - 123

kutty thathuvam

திருக்குறள்-37

திருக்குறள்

kutty thathuvam 122

kutty thathuvam

FUNNY VIDEO - SRK2581

kutty kavithai 1

kutty kavithai

நெட்டைப் புடலங்காய்.

kutty maruthuvam நெட்டைப் புடலங்காயை நாம் ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன் படுத்தி வருகிறோம்... இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன் படுத்த வேண்டும். நெட்டைப் புட லங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் இடைவெளி விட்டு ஒரு மண்டலம் சாப்பிட்டு வர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்து விடும். எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் நெட்டை புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.   அதிக உடல் சூட்டால் மஞ்சள் காமாலை நோ ஏற்பட்டால் அவர்கள் நெட்டைப் புடலங்கொடியின் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் அதே அளவு கொத்தமல்லி சேர்த்து 300மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை கட்டுப்படும். இதய கோளாறு உள்ளவர்கள் நெட்டைப் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டிவீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் அனைத்தும் நீங்கும். நெட்டைப் புடலையின்...

குழந்தை வளர்ப்பு முறை: கற்றுக் கொள்ள வேண்டியது நாம் தான்..

kutty thagaval

பயனுள்ள வீட்டு குறிப்புகள்

kutty thagaval 1. கல் தோட்டில் எண்ணெய் இறங்கி விட்டால், அதை ஒரு வெள்ளைத் துணியில் குப்புற வைத்து, அந்த வெள்ளைத் துணியை ஒரு இட்லிப் பாத்திரத்தில் வைத்து 15 நிமிடங்களுக்கு ஆவியில் வைத்தால், தோட்டில் இறங்கியிருந்த எண்ணெய் முழுவதும் துணியில் இறங்கி விடும். 2. தங்க நகைகள் அழுக்கடைந்து விட்டால் ஏதேனும் பற்பசையைத் தடவி ப்ரஷால் தேய்த்தால் அழுக்கெல்லாம் நீங்கி நகைகள் புதிதுபோல மின்னும். 3.. பல்லிகள் அதிகம் வராமல் தடுக்க; கடுக்காயைத் தூள் செய்து பொடித்த கற்பூரத்தை சம அளவில் கலக்கவும். இதில் ஒரு தேக்கரண்டிக்கு ஒரு டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் தேவையான அளவில் கலந்து, வீட்டைக் கழுவிய பிறகு ஆங்காங்கே ஜன்னல்கள், கதவுகள் ஓரமாகத் தெளித்தால் பல்லிகள் நடமாட்டம் வெகுவாகக் குறையும். 4. கண்ணாடி டம்ளர்கள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து எடுக்க வராவிட்டால், கீழ் டம்ளரை கொதிநீரில் வைத்து, மேலுள்ள டம்ளரில் மிகக்குளிர்ந்த நீர் ஊற்றி சிறிது நேரத்தில் மேல் டம்ளரை இழுத்தால் எளிதாக வந்துவிடும். 5. புத்தக பீரோவில் புகையிலைத் துண்டுகளைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. 6. தூபக்காலில் நெருப்பு...

எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

kutty maruthuvam *நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும்  *பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!* *அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது *கடுக்காய் பொடி* குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். *வில்வம் பொடி* அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது *அமுக்கரா பொடி* தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. *சிறுகுறிஞான் பொடி* சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். *நவால் பொடி* சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. *வல்லாரை பொடி* நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. *தூதுவளை பொடி* நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது. *துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது. *ஆவரம்பூ பொடி* இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். *கண்டங்கத்திரி பொடி* மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. *ரோஜாபூ பொடி* இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். *ஓரிதழ் தாமரை ...

குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு

kutty thagaval செய்யவேண்டியவை: 1.தினமும் குழந்தைக்கு மசாஜ் செய்யுங்கள். இது உடற்பயிற்சி செய்வது போன்ற பலனைத்தரும். 2.ரசாயனம் கலக்காத அல்லது கிளிசரின் சோப்பால் குளிப்பாட்டுங்கள். 3.குறைந்தது மூன்று மாதமாவது தாய்ப்பால் ஊட்டுங்கள். தாய்ப்பால் கொடுக்கும் முன் மார்பகக்காம்பை சுத்தம் செய்யுங்கள். 4.குழந்தையை தினமும் கொஞ்ச நேரமாவது வெயிலில் வைத்திருங்கள். குழந்தைக்குத் தேவையான வைட்டமின்-டி கிடைக்கும். 5.எப்போதும் குழந்தைக்கு காட்டன் துணிகளை அணிவியுங்கள். இது குழந்தையின் உடல் நலனுக்குப்பாதுகாப்பானது. 6. பால் கொடுக்கும் முன்பும், கொடுத்த பின்பும் பால் புட்டியை வெந்நீரில் கழுவுங்கள். 7. உடல் நலக்கோளாறு இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.  செய்யக்கூடாதவை : 1.குழந்தை அழும்போதெல்லாம் பால்கொடுக்காதீர்கள். பசியை தவிர வேறேதேனும் காரணத்திற்காகவும் குழந்தை அழக்கூடும். 2. தேவையில்லாமல் கண்ட மருந்துகளை கொடுக்காதீர்கள். 3.உச்சி வெயிலோ, வெப்பக்காற்றோ குழந்தையின் தோலை உறுத்துவதோடு, தோல் அழற்சியையும் ஏற்படுத்தும். 4.நைலான் இழைகளால் ஆன உடையை குழந்த...

தெனாலி ராமன் கதைகள் - டில்லி அரசரை வென்ற கதை

தெனாலி ராமன் கதைகள் ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார்.  கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டான். பாபர் ராமன்...

திருக்குறள்-36

திருக்குறள்

முல்லாவின் கதைகள் - யானைக்கு வந்த திருமண ஆசை.

முல்லாவின் கதைகள் மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது மன்னர் அதனைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை. தன்னுடைய யானை மீது வீண் புகார்கள் கூறுவதாகச் சிலரைக் கடிந்தும் கொண்டார். அதனால் யானையின் அட்டகாசம் பற்றி மேற்கொண்டு முறையிட யாருக்கும் துணிச்சல் வரவில்லை. அவர்கள் முல்;லாவைச் சந்திந்து மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றி எடுத்துக்கூறி மன்னரிடம் சொல்லி ஏதாவது செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முல்லா தம்மிடம் வந்தவர்களை நோக்கி " நீங்க எல்லாம் ஒன்று திரண்டு அந்த யானையைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விடுங்கள்" என்றார். " ஐய்யய்யோ மன்னரின் யானையைக் கட்டிப் போட்டு மீள முடியுமா? மன்னர் கடுமையான தண்டனை விதிப்பார்" என்று அச்சத்துடன் கூறினர் ஊர் மக்கள். நீங்கள் நான் சொன்னவாறு செய்யுங்கள். மன்னரிடமிருந்து யாராவது அங்கு வந்து கேட்டால் மு...

தெனாலி ராமன் கதைகள் - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை

தெனாலி ராமன் கதைகள் விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர். இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான். அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன் சேட்டைச் சந்தித்து "தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும் விழா முடிந்ததும் கொண்டு வந்து தருவதாகவும்" கூறினான். அதன்படியே சேட்டும் பாத்திரங்களை தெனாலிராமனுக்குக் கொடுத்தான். சில நாள் கழித்து தெனாலிராமன் அந்தப் பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக் கொடுத்தான். இதைப் பார்த்த சேட் "நான் பெரிய பாத்திரங்கள் மட்டும் தானே கொடுத்தேன். சிறிய பாத்திரங்களை நான் கொடுக்கவில்லையே......... அவற்றையும் ஏன் கொடுக்கிறாய்" என்று கேட்டான். அதற்குத் தெனாலிராமன் "உமது பாத்திரங்கள் "குட்டி" போட்டன. அவற்றையும்...

திருக்குறள்-35

திருக்குறள்

முல்லாவின் கதைகள் - மலிவான பொருள்

முல்லாவின் கதைகள் ஓரு தடவை துருக்கி மன்னர் - காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். அவருடைய பரிவாரத்துடன் முல்லாவும் சென்றார். மன்னர் பரிவாரத்துடன் சமையல்காரர் குழு ஒன்றும் சென்றது. சமையல்கார குழுவின் தலைவன் காட்டில் கூடாரமடித்து சமையல் செய்வதற்கான ஏற்பாடுகளில் முனைந்தபோது அரண்மனையிலிருந்து உப்பு எடுத்து வர மறந்து விட்டது தெரிந்தது. சமையற்காரத் தலைவன் மன்னர் முன் சென்று அச்சத்தோடு தலை கவிழ்ந்து நின்றான். " என்ன சமாச்சாரமஞ் என்று மன்னர் விசாரித்தார். சமையல் குழுத்தலைவன் நடுங்கிக்கொண்டே தான் உப்பு எடுத்து வர மறந்துவிட்ட செய்தியைச் சொன்னான். மன்னர் சமையல் குழுத் தலைவனைக் கடுமையாகக் கண்டித்தார். பிறகு தனது வீரர்களில் ஒருவனை அழைத்து நீ குதிரை மீதேறி அண்மையிலிருக்கும் கிராமத்திற்குச் சென்று யார் வீட்டிலாவது கொஞ்சம் உப்பு வாங்கிவா என உத்திரவிட்டார். அப்போது முல்லா முன்னால் வந்து மன்னரை வணங்கினார். " என்ன முல்லா ஏதாவது சொல்ல வேண்டுமா?" என்று கேட்டார் மன்னர். ஆமாம் மன்னவா படை வீரனிடம் கொஞ்சம் காசு கொடுத்து அனுப்புங்கள், குடிமக்களிடம் உப்பு இனாம...

தெனாலி ராமன் கதைகள் - கூனனை ஏமாற்றிய கதை

தெனாலி ராமன் கதைகள் ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசவைக்குக் கொண்டு வரப்பட்டது. தெனாலிராமனின் எந்த சமாதானத்தையும் அரசர் கேட்கத் தயாராக இல்லை. இராமனுக்குத் தண்டனையை அளித்து விட்டார். இராமன் மீது பொறாமை கொண்ட ராஜகுருவும் மன்னனைத் தூண்டி விட்டார். ராஜகுருவை அவமதித்தது மன்னனையே அவமதித்ததாகும். எனவே இக்குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாதுஎன்று சொல்லி ராஜகுருவையே தண்டனையளிக்கும்படி கேட்டுக் கொண்டார் மன்னர் .ராஜகுரு தண்டனையைக் கூறினார். " கழுத்து வரை தெனாலிராமனை மண்ணில் புதைத்து விட்டு யானையின் காலால் தலையை இடறச் செய்து கொல்ல வேண்டும்" என்று தண்டனையளித்தார். மன்னரும் " அப்படியே செய்யுங்கள்" என்று ஆணை பிறப்பித்தார். ஆணையை சிரமேற்கொண்ட காவலர்கள் தெனாலிராமனை இழுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றனர். வழியில் இராமன் அவர்களோடு என்னெனவோ பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். ஆனால் ராஜகுரு காவலர்களை எச்சரித்து தெனாலிராமன் ஏதேனும் பேசித் தப்பிவிடுவான். அதனால் எதுவும் பேசாதீர்கள் என்று கூறியிருந்தார். இந்த எச்சரிக்கை காரணமாக காவலர்கள் ...

உங்களுக்கு தெரியுமா ஏன் கால்கள் போர்வைக்கு வெளியே இருக்கும்படி உறங்க வேண்டும்.

kutty thagaval இந்த உலகில் யார் அதிகம் புண்ணியம் செய்தவர் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள், நிறைய பணம், நல்ல உத்தியோகம், ஆடம்பர வீடு, கார், பைக் எல்லாம் வைத்திருப்பவர்களையா? இல்லவே இல்லை, யார் ஒருவன் தன் வேலைகளை எல்லாம் முடித்த பிறகு, இரவு படுத்த இரண்டாவது நிமிடத்தில் ஆழமான, நிம்மதியான உறக்கம் பெறுகிறானோ அவன் தான் புண்ணியம் செய்தவன். இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்? உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? அப்ப இத ட்ரை பண்ணுங்க… உடல் தட்பவெப்ப நிலை! முதலில் நமது உடலை பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். நமது உடலில் தட்பவெப்பதிற்கு ஏற்ப தான் நமது உடல் விழிப்பான் எச்சரிக்கைகளை தரும். குளுமை! நமது உடல் குளுமையாக இருக்கும் போது நல்ல உறக்கம் வரும். கால் பாதங்களில் முடிகள் இல்லாததாலும், பாதத்தின் சருமம் மிகவும் மென்மையானது என்பதாலும், இது எளிதாக குளுமையடையும் கருவியாக இருக்கிறது. போர்வைக்கு வெளியே! இதனால் தான் படுக்கும் போது கால்களை போர்வைக்கு வெளியே இருக்கும் படி வைத்துக் கொள்ள கூறுகின்றனர். இதனால், நீங்கள் சீக்கிரமாக உறங்க முடியும். பாதத்தின் சருமம் வாஸ்குல...

திருக்குறள்-34

திருக்குறள்

தெனாலி ராமன் கதைகள் - ராஜகுருவை பழிக்குப் பழி வாங்குதல்

தெனாலி ராமன் கதைகள் ஒரு நாள் அதிகாலை நேரம் ராஜகுரு குளத்துக்குக் குளிக்கச் சென்றார். அப்போது அவரை அறியாமலேயே தெனாலிராமன் பின் தொடர்ந்தான். குளக்கரையை அடைந்ததும் ராஜகுரு துணிமணிகளை எல்லாம் களைந்து கரையில் வைத்துவிட்டு நிர்வாணமாக குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்ததார். மறைந்திருந்த தெனாலிராமன் ராஜகுருவின் துணிமணிகளை எடுத்துக்கொண்டு மறைந்து விட்டான். குளித்து முடித்து கரையேறிய ராஜகுரு துணிமணிகளைக் காணாது திடுக்கிட்டார். உடனே தெனாலிராமன் அவர் முன் தோன்றினான். தெனாலிராமன் எனது துணிமணிகளைக் கொடு என்று கெஞ்சினார். அதற்குத் தெனாலிராமனோ உன் துணிமணிகளை நான் பார்க்கவில்லை. நானும் குளிக்கவே இங்கு வந்துள்ளேன். என்னிடம் வம்பு செய்யாதீர்கள் என்றான். ராமா........ என் துணிமணிகளைக் கொடுத்துவுடு. இன்னும் சிறிது நேரத்தில் நன்கு விடியப்போகிறது. இக்குளத்துக்கு பெண்கள் குளிக்க வந்து விடுவார்கள். உடனே என் துணிமணிகளைக் கொடு என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினார். அவர் கெஞ்சுதலைக் கேட்ட தெனாலிராமன் என் நிபந்தனைக்கு உட்பட்டால் உம் துணிமணிகளைத் தருகிறேன். இல்லையேல் தர முடியாது என்று கூறி ...