உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு மோர்க்கூழ் - இயற்கை மருத்துவம்
கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று கம்பு மோர்க்கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கம்பு மாவு - 100 கிராம்,
மோர் - 150 மில்லி,
சின்ன வெங்காயம் - 10,
சீரகம் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
மோர் - 150 மில்லி,
சின்ன வெங்காயம் - 10,
சீரகம் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* கம்பு மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.
* சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கரைத்து வைத்த கம்பு மாவு, உப்பு, சீரகம் சேர்த்துக் கூழாக காய்ச்சவும். கைவிடாமல் கிளற வேண்டும். அப்போது தான் கட்டியில்லாமல் அடிபிடிக்காமல் இருக்கும். https://skumartrp98.blogspot.com
* காய்ச்சிய கூழை ஆற வைத்து, மோர் சேர்த்துக் நன்றாக கலக்கவும்.
* கலக்கிய கூழில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துப் பருகவும்.
* சூப்பரான சத்து நிறைந்த கம்பு மோர்க்கூழ் ரெடி.
Comments
Post a Comment