Skip to main content

Posts

Showing posts from March, 2020

உலர் திராட்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

kutty maruthuvam உலர்திராட்சையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பதால், கர்ப்பிணி பெண்கள் உலர்திராட்சையுடன் பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தினமும், ஒரு கிளாஸ் அருந்தினால் தங்களுக்கு பிறக்கும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றப்பழம் உலர் திராட்சை. எலும்புகள் உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்து கால்சியம் தான். இந்த கால்சியம் சத்து உலர்திராட்சை பழத்தில் அ திகமாக உள்ளது. தினமும் உடல் வலியால் அவதிப்படுபவர்கள் சிறிதளவு பெருங்காயத்துடன், உலர் திராட்சை பழத்தை சேர்த்து கஷாயம் செய்து அருந்திவர உடல் வலி குணமாகும். சில பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த, ஒரு சிறந்த மருந்தாக உலர் திராட்சை பயன்படுகிறது. 10 உலர் திராட்சை பழத்தை நீரில் ஊறவைத்து நன்றாக காய்ச்சி அருந்தினால் இந்த வயிற்று வலி பிரச்சனை சரியாகிவிடும். சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு ...

kutty story : கிளியோபாட்ரா

kutty story பிரமிடுகளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் எகிப்தை ஆட்சி செய்த பன்னிரண்டாம்டாலமிக்கும் ராணி இஸிசுக்கும் பிறந்த பெண் பிள்ளைக்கு கிளியோ பாட்ரா என்று பெயர். இவளுக்கு முன் ஏழு கிளியோபாட்ராக்கள் இருந்து உள்ளனர். எனவே தான் இவள் எட்டாவது கிளியோபாட்ரா என்று அழைக்கப் பெற்றார். இவள் 39 வயது வரை தான் இந்த பிரபஞ்சத்தில் வாழ்ந்தாலும், இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் பேசப்படும் பேரழகியாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். இவளது அழகும் அறிவுக் கூர்மையும், ஜோதிடம், வானசாஸ்திரத்தைக் கல்வியாகக் கற்று பல்வேறு துறைகளில் அவளுக்கு இருந்த ஆர்வம்,ஒன்பது மொழிகளில் எழுதவும் பேசவும் படிக்கவும் அறிந்து இருந்தவள். அழகு சாதனப் பொருட்களை போட்டுக் கொள்வதோடு அவற்றின் மருத்துவ குணங்கள் வேதியியல் தன்மை போன்றவற்றை அறிந்து பயன்படுத்தி வந்தாள். தன் 39 ஆம் வயதில் ஏழுவிதமான வாசனைத்திரவியங்களைக் கண்டு பிடித்து மகிழ்ச்சி அடைந்தவள். கிளியோபாட்ரா பன்முக ஆற்றல் கொண்ட சகலகலா வல்லி, மன்னர் டாலமிக்குவயதானதால் தன்னுடைய 18 வயது நிரம்பிய பருவமங்கை பேரழகி கிளியோபாட்ராவை பட்டத்து ராணியாக்க விரும்புகிறார். அக்...