ஒன்பதின் தத்துவம் 9ன் சிறப்பு தெரியுமா? எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது. எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள். பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்!. ஒன்பது எனும் எண் இன்னும் மகத்துவங்கள் கொண்டது. ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர். நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது. நவ சக்திகள்: 1,வாமை, 2,ஜேஷ்டை, 3,ரவுத்ரி, 4,காளி, 5,கலவிகரணி, 6,பலவிகரணி, 7,பலப்பிரமதனி, 8,சர்வபூததமனி, 9,மனோன்மணி, நவ தீர்த்தங்கள்: 1,கங்கை, 2,யமுனை, 3,சரஸ்வதி, 4,கோதாவரி, 5,சரயு, 6.நர்மதை, 7,காவிரி, 8,பாலாறு, 9,குமரி நவ வீரர்கள்: 1,வீரவாகுதேவர...