ஹெச்.ஜி.வெல்ஸ் வரலாறு அரசியல் சமூகம் ஆகிய அனைத்து களங்களிலும் தனது படைப்புகளால் தனிமுத்திரை பதித்த ஹெச்.ஜி.வெல்ஸ் 1866ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள ப்ரூம்ளி நகரில் பிறந்தார். இவரது முதல் நாவலான தி டைம் மெஷின் 1895-ல் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்று இலக்கிய உலகில் பரபரப்பாக பேசப்படும் எழுத்தாளர் ஆனார். இவர் தொடர்ந்து அறிவியல் புனைகதைகள் எழுதி வந்தார். 1920-ல் வெளிவந்த அவுட்லைன் ஆஃப் தி வேர்ல்டு புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. தி ஐலண்ட் ஆஃப் டாக்டர் மாரோ தி இன்விசிபிள் மேன் தி வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ் தி ஷேப் ஆஃப் திங்ஸ் டு கம் ஆகிய நூல்கள் இவருக்கு பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தது. ✍ வாழ்நாளில் சுமார் 50 ஆண்டு காலம் எழுத்திற்காக தன்னை அர்ப்பணித்த தொலைநோக்கு எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ் தனது 80-வது வயதில் (1946) மறைந்தார். ஹெச்.ஜி.வெல்ஸ்