பதினாறு பேறுகளும் அருளும் பதினாறு கணபதிகள்! வி நாயகப் பெருமானுடைய திருவடிவம் பக்தர்களின் மனப்பக்குவத்துக்கு ஏற்ப முப்பத்திரண்டு வகைகளாகப் போற்றப்படுகின்றன. அவற்றுள் பதினாறு வடிவங்கள், விநாயகரின் ஷோடச வடிவங்கள் என்று போற்றப்படுகின்றன. இந்த பதினாறு திருவடிவங்களையும் மனதில் தியானித்து, ஒவ்வொரு வடிவத்தின் பெயரையும் ஜபித்து ஆனைமுகனை தினமும் ஆராதித்து வந்தால், அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.