sithargalai patri 85 சித்தர் நூல்கள் : இப்போது பதிவிறக்கம் செய்யலாம் . உறவுகளே கீழே உள்ள நிறைய சித்தர் நூல்கள் மிகவும் அரிதான நூல்கள் . ஆகவே தயவு செய்து இந்த நூல்களை நீங்கள் பதிவிறக ்கம் செய்து அழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள் . அத்துடன் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் . இன்னும் இப்படியான அழியும் நிலையில் உள்ள நிறைய நூல்களை நான் இனி வரும் காலங்களில் பகிர்ந்து கொள்ளுகின்றேன் . இப்படியான நூல்களை நான் நிறைய காலமாக சேகரித்து வருகின்றேன் . உங்களி டம் உள்ள நூல்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் . என்னிடம் உள்ள நூல்களை PDF இக்கு மாற்றுவதற்கு காலங்கள் எடுக்கின்றன . அதற்காக மன்னிக்கவும் . எம் மொழியைக் காப்பது எமது கடமை . உங்கள் பொறுமைக்கு மிக்க நன்றி . எமது தமிழ் மொழி எமது உயிர் . அதை நாங்கள் தான் காப்பாற்ற வேண்டும் . இப்படியான நூல்களை ஒருவரே வைத்து இருக்காமல் எல்லோருடைய கைகளிலும் கொண்டு சேர்த்து விடுங்கள் . அதில் ஒரு சிறு துளியைத் தான் நான் உங்களுடன் சேர்ந்து செய்கின்றேன் . எம் போன்ற நாடற்...